இயக்குனர் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் - சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான, 'தேவர் மகன்' படம் குறித்து விமர்சிக்கும் விதமாக 'மாமன்னன்' பட ஆடியோ லாஞ்சில் பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அடுத்தடுத்து, இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அதே போல்... முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான படைப்பு மூலம் ஒட்டு மொத்த இயக்குனர்கள், பிரபலங்கள், மற்றும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ் - ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கர்ணன்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் 1995 ஆம் ஆண்டு கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், பெரிய நடிகர்களால் தேடப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிய மாரி செல்வராஜ், தற்போது நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள, நடிகரும் - அரசியல்வாதியுமான உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜூன் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்த போது, 'தேவர் மகன்' படம் குறித்து விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 7! ஆடிஷனில் கலந்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றி கசிந்த தகவல்.!
இவரின் பேச்சு குறித்து, ஒரு தரப்பினர் மாரி செல்வராஜுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சிலர் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இவரை பற்றி நடிகர் மாரி முத்து கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
மாரி முத்து, 'பரியேறும் பெருமாள்' படத்தில்... கயல் ஆனந்தியின் தந்தையாக நடித்திருந்தார். எனவே இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ஹீரோ கதிரிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி தான் இந்த பேட்டியில் பேசியுள்ளார். பல காட்சிகளில் பலவந்தமாக கதிரை நடிக்க வைத்ததாகவும், கொளுத்தும் வெயிலில் செருப்பு கூட இல்லாமல், பொட்டல் காட்டில் ஓடவிட்டாராம். இதனால் கல், முள்ளு, போன்றவை கதிரின் காலில் குத்தி ரத்தம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்ட த்ரிஷா! பயில்வான் கூறிய தகவல்!
ஒரு முறை... ரெண்டு முறை அல்ல.. பல முறை இதுபோல் பல காட்சிகளில் நடிக்க வைத்து வச்சு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே மறைந்த கூத்து கலைஞர் தங்கராசு இறப்பதற்கு முன் கொடுத்த பேட்டியில்... வசனம் மறந்து விட்டதாக கூறியதற்கு, மாரி செல்வராஜ் வயதில் பெரியவர் என்று கூட நினைத்து பார்க்காமல் அடித்ததாகவும், பின்னர் தன்னிடம் மன்னிப்பு கேட்டு கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாக கூறிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.