பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் நன்கொடையாளர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. துரதிஷ்டவசமாக செவ்வாய்கிழமை இரவு 7:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.
மேலும் செய்திகளுக்கு...மாயோன் வெற்றியை கொண்டாடும் சிபி சத்யராஜ்...டைரக்டருக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
இந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் மீனாவின் கணவர் குறித்த இரங்கலை தெரிவித்து வந்தனர். ரஜினி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.சந்தித்து இரங்கலைப் பகிர்ந்து கொண்டனர்.சரத்குமார், குஷ்பு, விக்டரி வெங்கடேஷ் மற்றும் பல பிரபலங்கள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.