இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? பொழப்ப பாருங்கப்பா-திரிஷா தொடர்பான சர்ச்சைக்கு மன்சூர் அலிகான் விளக்கம்

First Published | Nov 19, 2023, 12:19 PM IST

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா?  என மன்சூர அலிகான் விளக்கம் அளித்துள்ளார். 

மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ, இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நடிகை த்ரிஷா குறித்தும் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என மிகவும் ஆபாசமாக பேசியிருந்தார். வில்லன் ரோல் கொடுக்க மாட்டேங்குறாங்க, நடிகையுடன் கற்பழிப்பு காட்சி இல்லையென கூறியிருந்தார். 

actres trisha says actor mansoor ali khan bad name to mankind

மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு

இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிஷா வெளியிட்டு எக்ஸ் தள பதிவில்,  மன்சூர் அலி கான் என்னைப் பற்றி அவருவருக்கதக்க வகையில் பேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது.  அவரது பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. அவரது பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், பெண் வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளது.  

Latest Videos


இனி நடிக்கவே மாட்டேன்

அவரைப் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் இணைந்து நடிக்கவில்லை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் நடிக்காமல் மாட்டேன் என்பது உறுதி என திரிஷா தெரிவித்திருந்தார்.

director lokesh kanagaraj support actress trisha for mansoor ali khan sexual statement ntn

லோகேஷ் கனகராஜ் கண்டனம்

இதே போல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்களும் மன்சூர் அலிகான் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், மன்சூர் அலிகான் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.மன்சூர் அலிகான் பேசியதை கண்டு நான் மனம் உடைந்தேன். அது என்னை கொதிப்படையவும் செய்துள்ளது.

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்குமான மரியாதை சமரசமின்றி வழங்கப்பட வேண்டும்
 

 மன்சூர் அலிகான் விளக்கம்

இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில்,  அய்யா' பெரியோர்களே. திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு, பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடுறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருக்கானுக.

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.
 

mansoor ali khan

த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா, என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

mansoor ali khan

சக நடிகைகளுக்கு மரியாதை

மேலும், ‘லியோ’ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு த்ரிஷாக்கிட்ட சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் என எல்லாருக்கும் தெரியும். த்ரிஷாக்கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து; கோபம், மனமுடைந்தேன் - மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கனகராஜ் கண்டனம்!

click me!