த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து; கோபம், மனமுடைந்தேன் - மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கனகராஜ் கண்டனம்!

First Published | Nov 19, 2023, 9:16 AM IST

த்ரிஷா குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

த்ரிஷா

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகை த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா, அரண்மனை 2, 96, பேட்ட என்று ஏராளமான மாஸ் படங்களில் நடித்துள்ளார். 

https://www.instagram.com/p/CzzFh8xBE64/?utm_source=ig_web_copy_link

லியோ

இவரது நடிப்பில் வந்த பொன்னியின் செல்வன் பார்ட் 1, குந்தவி கதாபாத்திரம் பட்டி தொட்டியெங்கும் பரவியைத் தொடர்ந்து சினிமாவில் புதிய அத்தியாயம் படைக்கும் அளவிற்கு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறார். மேலும், அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்த வண்ணம் உள்ளது.

Tap to resize

மன்சூர் அலிகானுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா

சமீபத்தில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருடன் இணைந்து நடித்த லியோ படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு சக்ஸஸ் மீட்டும் நடந்தது.

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை

இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் தான் நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். என்னதான், அவர் வில்லன் நடிகராக இருந்தாலும் வில்லத்தனமான அவரது சர்ச்சை பேச்சுக்கு கோலிவுட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியுள்ளது.

மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம்

குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு படுக்கையறை காட்சியில் நடித்தது போன்று லியோவில் த்ரிஷாவையும் அப்படியே அலேக்காக தூக்கி சென்று பெட்ரூமில் போட்டு நடிப்பேன் என்று நினைத்தேன். என்ன 150 படங்களில் பண்ணாத அட்டூழியமா? வில்லனாகவே போட மாட்டிங்கிறாங்க என்றெல்லாம் கூறியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் கண்டனம்

இதற்கு த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

த்ர்ஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து

மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக் காண்கிறேன். அவர் ஆசைப்படலாம். ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் இடத்தைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து

மேலும் என் திரையுலக வாழ்க்கையில் அது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.

த்ரிஷா - மன்சூர் அலிகான்

இவரைத் தொடர்ந்து லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் ஒன்றாக பணிபுரிந்தோம் என்ற அடிப்படையில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது கேட்டு மனம் வேதனை அடைந்தேன். கோபம் அடைந்தேன். பெண்கள், சக நடிகர்களுக்கான மரியாதை என்பது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், கண்டனம் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!