மனோஜ் பாரதிராஜா பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்; அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில்!
பாரதிராஜாவின் மகன் மனோஜ் தன்னுடைய கெரியரில் நடிகராக, இயக்குனராக மட்டுமின்றி ஒரு பாடகராகவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் தன்னுடைய கெரியரில் நடிகராக, இயக்குனராக மட்டுமின்றி ஒரு பாடகராகவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
Manoj Bharathiraja Sing This Blockbuster hit Song in AR Rahman Music : பாரதிராஜாவின் மகனான மனோஜ், சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால் அவரை ஹீரோவாக்க வேண்டும் என ஆசைப்பட்ட பாரதிராஜா, தான் இயக்கிய தாஜ் மஹால் படத்தின் மூலம் மனோஜை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அப்படம் மனோஜிக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
தாஜ் மஹால் ஹீரோ மனோஜ்
தாஜ் மஹால் படத்திற்கு பின் ஹீரோவாக ஒன்றிரண்டு படங்களில் மனோஜ் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ஹீரோவாக நடிக்கும் முடிவை கைவிட்டு, டைரக்ஷனுக்கு திரும்பினார் மனோஜ். தன்னுடைய முதல் படமாக சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியாவில் இருந்த மனோஜ் அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளையும் முடித்துவிட்டார். ஆனால் அப்படம் நீண்ட நாட்களாக கைகூடாமல் போனது.
மாரடைப்பால் மனோஜ் மரணம்
இதையடுத்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு, மார்கழி திங்கள் படம் மூலம் டைரக்டராக எண்ட்ரி கொடுத்தார் மனோஜ், இப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படமும் மனோஜுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதையடுத்து பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த மனோஜ், கடந்த மார்ச் 25-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். 48 வயதில் மனோஜின் மறைவு தமிழ் திரையுலகை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தை மிஸ் பண்ணிய மனோஜ் பாரதிராஜா! எந்த படம் தெரியுமா?
மனோஜ் பாடிய ஒரே ஒரு பாட்டு
மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் திரையுலகமே திரண்டு வந்தது. நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்ட மனோஜ், ஒரு பாடகர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இதுவரை ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார். அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில்... அந்த பாடல் ஹிட் ஆனாலும் அதன்பின் மனோஜ் பாடவில்லை. அது வேறெதுவுமில்லை தாஜ் மஹால் படத்தில் இடம்பெற்ற ‘ஈச்சி எலுமிச்சி’ பாடலை தான் மனோஜ் பாடி இருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய மனோஜ்
மனோஜின் வாய்ஸை கேட்டும் இம்பிரஸ் ஆன ஏ.ஆர்.ரகுமான் எந்த பாடலை பாட விரும்புகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் திருப்பாச்சி அருவாளை பாடலை பாடுகிறேன் என சொல்லி இருக்கிறார். உடனே ரகுமான், அது வேண்டாம், ஈச்சி எலுமிச்சி பாடுங்கள் என சொன்னதும், ஓகே சொல்லி அந்த பாடலை பாடினாராம் மனோஜ். அந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக அது மனோஜ் பாடிய பாடல் என்பது வெளியில் தெரியவில்லை.
இதையும் படியுங்கள்... மனோஜ் பாரதிராஜா இறப்புக்கு மாரடைப்பு காரணமல்ல! இது தான்! தம்பி ராமையா பேச்சு!