ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே! ஒரு வழியாக காதலன் போட்டோவை வெளியிட்ட அபிநயா
நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆன நடிகை அபிநயா, தன்னுடைய காதலனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டு இருக்கிறார்.
நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆன நடிகை அபிநயா, தன்னுடைய காதலனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டு இருக்கிறார்.
Actress Abhinaya Reveal her Lover Photo : 2008-ல் தெலுங்கில் 'நேனிந்தே' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், 2009-ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள்' மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது உட்பட பல விருதுகளை பெற்றார். இந்த படத்தின் வெற்றியால் அபிநயாவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உட்பட பல படங்களில் நடித்தார்.
நாடோடிகள் நடிகை அபிநயா
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி வெளியான அபிநயா நடித்த 'பணி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. திரையரங்குகளில் வெளியான இந்த படம் சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறுவயதிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அபிநயா தனது தன்னம்பிக்கையால் இன்று நடிகையாக ஜொலிக்கிறார். அவரது பெற்றோர் அவரது ஆசைக்கு ஆதரவளித்தது அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் எனலாம்.
இதையும் படியுங்கள்... விஷால் உடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர்; நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
விஷாலுடன் காதல் கிசுகிசு
பொதுவாக சினிமா துறையில் பிரபலங்கள் பற்றி கிசுகிசுக்கள் வருவது சகஜம். அபிநயாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டு விஷாலுடன் அபிநயா பெயர் இணைத்து பேசப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் எழுதினர். இப்படிப்பட்ட கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அபிநயா முதன்முறையாக தனது காதலை பற்றி வெளிப்படையாக அறிவித்தார். அதன்படி தான் தனது நண்பர் ஒருவரை கடந்த 15 வருடங்களாக காதலிப்பதாகவும், இனிமேல் தன்னை எந்த நடிகருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் கூறினார்.
காதலன் போட்டோவை வெளியிட்ட அபிநயா
இதனிடையே அண்மையில் அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இருப்பினும் தன்னுடைய காதலனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்த அபிநயா, நேற்று அதிகாரப்பூர்வமாக தன்னுடைய காதலன் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அவர்கள் இருவரின் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருப்பதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 15 வருஷமா அவர் கூட ரிலேஷன் ஷிப்பில் இருக்கேன்! காதலை ஓப்பனாக கூறிய அபிநயா!