சிக்கந்தர் மூலம் கம்பேக் கொடுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்? விமர்சனம் இதோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள சிக்கந்தர் படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

AR Murugadoss Directional Salman Khan Starrer Sikandar Movie Twitter Review gan

Sikandar Movie Twitter Review : சல்மான் கான் ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை இயக்கி இருந்தார். அதன்பின்னர் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆன சிக்கந்தர்

இந்த படத்தில் சல்மான் கானுடன் காஜல் அகர்வால், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், பிரதீக் பப்பர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் விடுமுறையை ஒட்டி இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்... இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா? அதுக்கு அவர் ஓகே சொல்வாரா?


சிக்கந்தர் எப்படி உள்ளது?

சிக்கந்தர் சூப்பர் ஹிட் என்று ஒரு நெட்டிசன் கூறுகிறார். சல்மான் கானின் முந்தைய படங்களை விட இது மிகவும் நன்றாக உள்ளது. ஆக்‌ஷனுடன் எமோஷனையும் அருமையாக காட்டியுள்ளனர். பாடல்களும் நன்றாக உள்ளன. படம் முழுவதும் அருமையாக உள்ளது என படத்தை பற்றி பாசிட்டிவ் ஆக பதிவிட்டுள்ளார். 

கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?

மற்றொரு நெட்டிசன், சிகந்தர் பெரிதாக ஈர்க்கவில்லை என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் ஏமாற்றம் அளித்தார். கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு என அனைத்தும் சராசரியாக உள்ளது. ஒரு முறை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.  சல்மான் கானின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் இது என்று மற்றொரு நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார். சல்மான் கான் நடிப்பு, திரைக்கதை அருமையாக உள்ளது. ராஷ்மிகா, காஜல் சிறப்பாக நடித்துள்ளனர். 

சிக்கந்தர் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

சிக்கந்தர் சூப்பர் ஹிட் திரைப்படம், மாஸ் திரைப்படம், ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன. பின்னணி இசை அற்புதமாக உள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் என பதிவிட்டுள்ளார். ஆனால் சிலர் படம் போர் அடித்தது என கூறுகின்றனர். இப்படி கலவையான விமர்சனங்களை சிக்கந்தர் படம் பெற்று வருகிறது. இருப்பினும் இப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். அது எந்த அளவுக்கு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்...  ராஷ்மிகா ஆட்டத்தால் பிளாட் ஆன சல்மான் கான்! டிரெண்டாகும் சிக்கந்தர் பட டைட்டில் டிராக்

Latest Videos

vuukle one pixel image
click me!