நேபாளத்தை சேர்ந்தவரான மனிஷா கொய்ராலா, இந்தி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 1990-களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த மனிஷா கொய்ராலாவை தென்னிந்திய திரையுலகம் பக்கம் இழுத்து வந்தது மணிரத்னம் தான், அவர் இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பாம்பே படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் மனிஷா கொய்ராலா. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு, மனிஷாவின் நடிப்புக்கு விருதுகளையும் வென்று குவித்தது.
24
பாம்பே படத்தின் வெற்றிக்கு பின் ஷங்கர் இயக்கிய இந்தியன் மற்றும் முதல்வன் போன்ற படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த மனிஷா கொய்ராலா, தமிழில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். இதையடுத்து இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாபா திரைப்படம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருந்தார் மனிஷா. அந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொண்ட படமாகவும் பாபா இருந்து வந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன பாபா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் நடித்ததால் தான் தென்னிந்திய திரையுலகில் தனது கெரியரே முடிவுக்கு வந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது : “பாபா ஒரு பிளாப் படம் மட்டுமில்லை. அது ஒரு டிசாஸ்டர் படம் அப்படம் தோல்வி அடைந்தபோது என் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைத்தேன். அதுவே நடக்கவும் செய்தது.
44
பாபா படத்துக்கு முன்னர் வரை தென்னிந்திய சினிமாவில் நல்ல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாபா படத்தின் படுதோல்விக்கு பின்னர் எனக்கு தென்னிந்தியாவில் இருந்து எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை” என ஆதங்கத்துடன் பேசி உள்ளார் மனிஷா கொய்ராலா. ஆனால் உண்மையில் பாபா படத்துக்கு பின்னர் அவர் கமலுக்கு ஜோடியாக மும்பை எக்ஸ்பிரஸ், தனுஷுக்கு வில்லியாக மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.