சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போது என்னை ஓவியம் வரைய சொன்னாங்க. என்ன வரையலாம்னு எனக்கு தெரியல. உடனே நான் ஐஸ்வர்யா ராயை தான் வரைந்தேன். அதுக்காக எனக்கு பர்ஸ்ட் பிரைஸும் கொடுத்தாங்க. நான் வரைஞ்சதுனால எனக்கு முதல் பரிசு கிடைக்கல. அதுல நீங்க இருந்ததுனால தான் கிடைச்சுது என சிம்பு சொன்னதும், அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
இதையடுத்து சிம்புவிடம், இந்த படத்துல உங்களுக்கு ரொம்ப புடிச்சது குந்தவையா? நந்தினியா? என தொகுப்பாளர் கேட்க, அதற்கு சிம்பு “இரண்டு கண்ணுல எது வேணும்னு கேட்டா என்ன பண்ண முடியும்?” என பதிலளித்ததும் விசில் பறந்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பேசிய சிம்பு, தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார். எப்படி அவரால் மட்டும் முடிகிறது என தெரியவில்லை. நேற்று முன்தினம் தான் பத்து தல பார்த்தேன். பிரிச்சி மேஞ்சிட்டாருங்க. அந்தப்படம் அவ்ளோ சூப்பரா வந்துருக்கு என சிம்பு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் விழாவில் அருகருகே சேர் போட்டும் ஜோடியாக அமர மறுத்த சிம்பு - திரிஷா... லீக்கான போட்டோ