நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.
இதையடுத்து வெளிமாநிலங்களில் இப்படத்தின் புரமோஷன் இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று கேரளா சென்றுள்ள பொன்னியின் செல்வன் டீம், இதையடுத்து 22-ந் தேதி பெங்களூருவுக்கு செல்ல உள்ளது. அதன்பின்னர் 23-ந் தேதி ஐதராபாத்திலும், 24-ந் தேதி மும்பையிலும் நடைபெற உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள அவர்கள், இறுதியாக 26-ந் தேதி டெல்லியில் இந்த சுற்றுப்பயணத்தை முடிக்க உள்ளனர்.
அதன்படி இன்று கேரளாவில் நடக்க உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு. இந்த விமான பயணத்தின் போது இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி ஆகியோர் எடுத்த செல்பி புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?