ரோஜா படத்தில் இருந்து மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்குமே இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து வந்தார். தற்போது தன்னுடைய அடுத்த படத்தில் வேறு இசையமைப்பாளருடன் பணியாற்ற உள்ளாராம் மணிரத்னம்.
மணிரத்னம் படங்கள் என்றாலே அதில் பாடல்கள் கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதற்கு முக்கிய காரணம் அவர் படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளர்கள் தான். அவர் தன்னுடைய கெரியரில் இரண்டே இசையமைப்பாளர்கள் உடன் தான் பணியாற்றி உள்ளார். அவரின் ஆரம்பகட்ட சினிமா பயணத்தில் இளையராஜா உடன் தொடர்ந்து பயணித்து வந்தார். இவர்கள் கூட்டணியில் வந்த அஞ்சலி, மெளன ராகம், நாயகன் போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ரோஜா படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பணியாற்றி வந்தார் மணிரத்னம்.
24
மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் காம்போ
ரோஜாவில் தொடங்கிய இவர்களது பயணம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன தக் லைஃப் படம் வரை நீண்டது. சுமார் 34 ஆண்டுகள் இணைபிரியாமல் இருந்த இந்த காம்போ ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது. மணிரத்னம் படம் என்றாலே பல்வேறு ஆச்சர்யங்களும் பாடல்களில் ஒளிந்திருக்கும். அதற்கு ஏற்றார் போல் ரகுமானும் தன்னுடைய மாயாஜால இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுவார். மணிரத்னம் இயக்கி தோல்வி அடைந்த படங்களில் கூட ரகுமானின் பாடல்கள் வெற்றிபெற்றுவிடும். அந்த அளவுக்கு ஆளுமை மிக்க காம்போவாக இருவரும் இருந்து வந்தனர்.
34
சாய் அபயங்கர் உடன் கூட்டணி அமைக்கும் மணிரத்னம்
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னத்தின் 34 வருட பயணம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மணிரத்னம் அடுத்ததாக இயக்க உள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது டிரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளரான சாய் அபயங்கர், இளசுகளின் பல்சை பிடித்து தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். இதனால் தன்னுடைய அடுத்த படமும் இளைஞர்களை கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் சாய் அபயங்கரை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னம் அடுத்ததாக ஒரு காதல் படத்தை இயக்க உள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்திலேயே மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் சாய் பல்லவிக்கு அவருடன் இணைவது இதுவே முதன்முறை ஆகும். சாய் பல்லவி தனக்கு மிகவும் பிடித்த நடிகை என மணிரத்னம் பல மேடைகளில் கூறி இருக்கிறார். தற்போது அவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.