பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி வீட்டுக்கு வந்த பின்னர் அவரிடம் சண்டை போட்டுள்ளார் பாண்டியன். இதனால் புது பிரச்சனை வெடித்துள்ளது, அதைப்பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி கோவிலுக்கு போன விஷயத்தை மறைத்து அவர் காணாமல் போய்விட்டதாக காந்திமதி டிராமா போட்டிருந்தார். அம்மா தொலைந்து போனதற்கு நீங்கள் தான் காரணம் என் செந்திலும், கதிரும் தன் பங்கிற்கு பாண்டியனை திட்டிக் கொண்டிருக்க, கோவிலுக்கு சென்ற கோமதி இரவில் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவர் வந்ததும் பாண்டியன், அவரைப் போட்டு செம திட்டு திட்டுகிறார். இதனால் வீட்டில் மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கிறது. இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
பாண்டியனை திட்டும் கோமதி
இன்றைய எபிசோடில், கோமதிக்கும் பாண்டியனுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகிக் கொண்டே செல்கிறது. கோமதி, பாண்டியனிடம், என்னைய கேட்டா நீங்க என் பொண்ணுக்கு உங்க அக்கா குடும்பத்துல நிச்சயம் பேசுனீங்க, அதேமாதிரி குழலியோட கல்யாணத்தையும் நீங்களா தான முடிவு பண்ணுனீங்க. நான் கதிருக்கும் ராஜிக்கும் ஒரே ஒரு கல்யாணம் பண்ணுனேன், அவங்க ரெண்டு பேரும் நல்லா தான இருக்காங்க என சொல்லி பாண்டியனுக்கு செம டோஸ் கொடுக்கிறார் கோமதி.
35
ஆதங்கத்தை கொட்டும் பாண்டியன்
இதுக்கப்புறம் நானாக வந்து உங்களிடம் பேச மாட்டேன். இனி நான் காணாமல் போனாலும் என்னைய யாரும் தேட வேண்டாம் என சொல்லிவிட்டு விறுவிறுவென ரூமுக்குள் செல்கிறார். பாண்டியனும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, கடைக்கு சென்றுவிடுகிறார். அங்கு சரவணனிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டும் பாண்டியன், பார்த்தியா உன் அம்மா மனசுக்குள்ள எவ்வளவு விஷயத்தை பொதச்சு வச்சுக்கிட்டு, இப்போ வெளிய விடுறா என சொல்கிறார். சரவணன் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் வேலைக்கு ஆகவில்லை.
அதே நேரத்தில் கோமதி அவருடைய அம்மா காந்திமதியிடம், ஏன்மா உன்கிட்ட சொல்லிட்டு தான் போனேன், நீ ஏன் வீணா இவ்ளோ பெரிய டிராமாவை போட்டு வச்சிருக்க என சொல்ல, அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அதன்பின்னர் அனைவருக்கும் தெரியவருகிறது. இதெல்லாம் அப்பத்தா வேண்டுமென்றே போட்ட டிராமா என்று தெரிந்துள்ளது. மீனாவும் அப்பத்தாவின் ஆக்டிங்கை பார்த்து வாயடைத்துப் போய் இருக்கிறார். அரசி மற்றும் ராஜி இருவரும் ஏன் இப்படி பண்ணீங்க என கேட்க, அவரோ இவங்க ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க தான் இப்படி பண்ணுனேன் என கூறுகிறார்.
55
செம கோபத்தில் பாண்டியன்
மறுபுறம் பாண்டியன், தன்னுடைய மகன்கள் கதிர் மற்றும் செந்தில் மீது செம கோபத்தில் இருக்கிறார். அவனுங்க ரெண்டு பேரும் என்னை என்னவெல்லாம் பேசுனாங்க பாத்தியா என பழனி மற்றும் சரவணனிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். பாண்டியனையும் கோமதியையும் சேர்த்துவைக்க பாட்டி போட்ட பிளான் தற்போது அப்படியே உல்டாவாக மாறி, மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. அதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.