எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிலையில், சக்தி, தேவசகாயத்தை சந்தித்து உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை அழிக்க வீட்டில் ஒரு மாந்திரிகரை அழைத்து வந்து பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆதி குணசேகரன். அந்த பூஜையில் ஜனனியின் துணி ஒன்றை நெருப்பில் போட்டு எரிக்க இருந்தனர். அப்போது அறிவுக்கரசி ஜனனியின் துணியை எடுத்துக் கொண்டு தீயில் போடப்போக அந்த நேரத்தில் விசாலாட்சியின் அண்ணன் சாமியாடிக்கு அருள் வந்து கத்துகிறார். இதைப்பார்த்து பயந்து, அறிவுக்கரசி பின்வாங்கிவிடுகிறார். அதன்பின் இந்த பூஜை தப்பான என எச்சரித்துவிட்டு, அங்கிருந்து செல்கிறார் சாமியாடி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ஆதி குணசேகரனின் புது உத்தரவு
இதையடுத்து அவர் சென்றபிறகு தாங்கள் நினைத்தபடி ஜனனிக்கு எதிரான பூஜையை நடத்தி முடித்துள்ளார் ஆதி குணசேகரன். இந்த பூஜை முடிந்த பின்னர் தன் தம்பிகள் மற்றும் அறிவுக்கரசி உடன் மாடியில் மீட்டிங் போட்டிருந்த ஆதி குணசேகரன், வக்கீல் சொன்னது நியாபகம் இருக்கா, அதுப்படி நடங்க என சொல்கிறார். வக்கீல் என்ன சொன்னார் என கதிர் கேட்க, வீட்டுல இருக்கும் பெண்களை அடக்கி வைத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு வக்கீல் சொன்னதாக அறிவுக்கரசி கூறுகிறார். இதுவரை பொண்டாட்டிகளிடம் பாசமழை பொழிந்தவர்களை, இனி புலிகளாக பாயச் சொல்லி இருக்கிறார் குணசேகரன்.
35
பதற்றத்தில் விசாலாட்சி
மறுபுறம் பூஜை முடிந்ததும் கிச்சனில் மருமகள்கள் மற்றும் பேத்திகளோடு ஒன்றுகூடி பேசிய விசாலாட்சி, எனக்கு என்னம்மோ பயமா இருக்குடி என சொல்லி ஃபீல் பண்ணுகிறார். ரொம்ப மனசை போட்டு குழப்பிக்காதீங்க அத்தை, ஜனனியை சக்தி பத்திரமா பாத்துக்கிடுவான் என சொல்லி அவரை ஆசுவாசப்படுத்துகிறார் ரேணுகா. தன் தம்பி அந்த பூஜை பற்றி சொன்னதைக் கேட்டதில் இருந்தே பதற்றத்தோடு தான் இருந்து வருகிறார் விசாலாட்சி. அவரின் பயம் முழுவதும் சக்தி மற்றும் ஜனனி மீது தான். இருவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும் என வேண்டுகிறார்.
கொடைக்கானலில் ஜாலியாக ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கும் சக்தி மற்றும் ஜனனி இருவரும் ஜோடியாக வாக்கிங் சென்றபோது, தாங்கள் தங்கியிருக்கும் ரெசார்ட் ஓனரை சந்திக்க இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது ஜனனி வெளியே வெயிட் பண்ணிக் கொண்டிருக்க சக்தி மட்டும் உள்ளே சென்று தேவசகாயத்தை பார்க்கிறார். அவர் சக்தியிடம் நலம் விசாரித்து, உங்க மனைவி வரலையா என கேட்கிறார். அவங்க வெளியே வெயிட் பண்ணுவதாக சக்தி கூறுகிறார். அவரிடம் ஒரு போன் பண்ணிக் கொள்வதாக கூறி பர்மிஷன் கேட்க, அவரும் ஓகே சொல்லிவிடுகிறார்.
55
நந்தினிக்கு போன் போட்டு பேசிய சக்தி
பின்னர் தேவசகாயத்தின் ரூமில் உள்ள லேண்ட் லைனில் இருந்து நந்தினிக்கு போன் போடுகிறார் சக்தி. அப்போது அவர் தாங்கள் இருவரும் இங்கு பத்திரமாக இருப்பதாகவும், வீட்டில் ஏதாவது பிரச்சனையா என்றும் விசாரிக்கிறார். இங்கு ஆதி குணசேகரன் பூஜை நடத்திய விஷயத்தை சொல்கிறார் நந்தினி. பின்னர் இந்த நம்பரை நோட் பண்ணி வைத்துக் கொள்ள சொன்ன சக்தி, ஏதாவது அவசரம் என்றால் இந்த நம்பருக்கு அழைக்குமாறு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.