ஆஸ்கர் குழுவில் இணைய, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்கர் தேர்வு குழுவில் இடம்பிடித்த, முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையையும் பெற்றார் சூர்யா. இவர்கள் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்று, நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்த படங்களுக்கு, தங்களுடைய வாக்குகளையும் அளித்து வெற்றிபெறும் படத்தை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு, அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட நான்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 398 பேர் கொண்ட இந்த உறுப்பினர் பட்டியலில், தற்போது இயக்குனர் மணிரத்னம், தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், ஆகிய 4 பிரபலங்களில் பெயர்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் 'மாமன்னன்'..! வாழ்த்து கூறிய கமல்ஹாசன்..!
இதுகுறித்து இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயக்குனர் மணிரத்னம் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்கள் என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.