Mamitha Baiju Salary:பிரேமலு மூலம் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற மமிதா பைஜூ, பெத்லகேம் குடும்ப யூனிட் மூலம் பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். தற்போது ஒரு படத்துக்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகில் இளம் நடிகையாக அறிமுகமாகி, தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் கவனம் ஈர்த்து வருபவர் மமிதா பைஜூ. குறிப்பாக 2024-ம் ஆண்டு வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் ரீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
26
மமிதா பைஜூ திரைப்பயண வளர்ச்சி
படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்குப் புதிய பட வாய்ப்புகள் அதிகரித்தன. அதற்கு முன்பே ‘ஆபரேஷன் ஜாவா’, ‘கோ கோ’, ‘சூப்பர் சரண்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், ‘பிரேமலு’ அவரை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இதன் மூலம் மலையாள சினிமாவைத் தாண்டி மற்ற மொழித் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தும் நடிகையாக அவர் வளர்ந்தார். தற்போது அவரது சம்பளம் குறித்த தகவல்களும் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளன.
‘பிரேமலு’ படத்துக்காக மமிதா பைஜூ சுமார் ரூ.8 லட்சம் சம்பளம் பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது சந்தை மதிப்பு உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மமிதா பைஜூவின் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதும் அவரது வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’, தனுஷுடன் ‘கர’, சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் அவர் இடம்பெற்றுள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த ‘டியூட்’ திரைப்படமும் அவரது தமிழ் ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்த உதவியது.
56
பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றி
அண்மையில் மலையாளத்தில் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூலில் சக்கைபோடு போட்ட ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மமிதா பைஜூவை பான் இந்தியா நடிகையாக மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
66
மமிதா சம்பளம்
2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தியின்படி, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கு அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் கேட்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.