பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டியூட் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
'பிரேமலு' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை மமிதா பைஜு. தற்போது 'டியூட்' என்ற படத்தில் நடித்துள்ளார் மமிதா. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டன. இப்படம் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது. இதுதவிர வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் படத்திலும் மமிதாவே நாயகியாக நடிக்கிறார். 'டியூட்' அறிவிக்கப்பட்டது முதல், சமூக ஊடகங்களில் அப்படத்திற்காக மமிதா வாங்கும் சம்பளம் குறித்த விவாதங்கள் அதிகம் பரவின.
24
மமிதா பைஜு கொடுத்த பதிலடி
'டியூட்' படத்திற்காக மமிதா 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது "என்னைப்பற்றி நான் கேட்ட மிகப்பெரிய வதந்தி சமீபத்தில் வந்த 15 கோடி ரூபாய் சம்பளம் தான். அவர்கள் இப்படி ஏதாவது ஒன்றை பதிவிடுவார்கள். சும்மா ஒரு எண்ணைப் போடுகிறார்கள். மமிதா ஒரு பதினைந்து கோடி வாங்குவார், இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள். அதன் கீழே வரும் கமெண்ட்களை பார்க்க வேண்டும். இவளுக்கெல்லாம் 15 கோடி சம்பளமா? என்பது போல இருக்கும். யாரோ செய்த தவறுக்கு பழி முழுவதும் நமக்குத்தான்." என்று பேசியுள்ளார் மமிதா.
34
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு
குறும்படங்கள் மூலம் வந்து, இயக்குநராகி பின்னர் நடிகராக மாறிய பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரதீப் எழுதி இயக்கிய 'கோமாளி' மற்றும் 'லவ் டுடே' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதேபோல் அவர் நாயகனாக நடித்த 'லவ் டுடே', 'டிராகன்' படங்களையும் ரசிகர்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கினார்கள். தற்போது 'டியூட்' படத்தின் ரிலீஸுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வருகிறது.