சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ஒரு போலி டாக்டரிடம் ஆலோசனை கேட்டு வந்து வீட்டில் செய்த லூட்டியை பார்த்து அனைவரும் அவரை பங்கமாக கலாய்த்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனது ஷோரூமுக்கு வந்த ஒரு சிறுவன் ரொம்ப சேட்டை செய்ததால் அவனை அடித்துவிடுகிறார். இதனால் அந்த சிறுவனின் தாயார், மனோஜை திட்டுவதோடு, உனக்கு குழந்தை இருக்கா என கேட்க, அவன் இல்லை என சொன்னதும், உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது என சாபம் விட்டு செல்கிறார். பின்னர் டாக்டர் ஒருவரை சந்தித்து, தனக்கு குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். அந்த டாக்டர் சொன்ன கோமாளித்தனமான விஷயத்தை வீட்டில் வந்து செய்கிறார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
குழந்தையாக மாறிய மனோஜ்
அந்த டாக்டர் மனோஜிடம், குழந்தைபோல் நீங்கள் தொட்டிலில் தான் தூங்க வேண்டும், ஃபீடிங் பாட்டிலில் தான் பால் குடிக்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு, வீட்டில் தொட்டில் கட்டி, அதில் ஆடிக் கொண்டிருக்கிறார் மனோஜ், அப்போது அங்கு வரும் விஜயா, தன் மகனுக்கு என்ன ஆனதோ என்று புலம்ப, அவன் டாக்டர் சொன்னதைப் போல் குழந்தைபோலவே நடந்துகொள்கிறான். இதைப்பார்த்த முத்து, மீனா, ஸ்ருதி, ரவி ஆகியோர் சிரிக்கிறார்கள். அவனுக்கு பைத்தியம் பிடித்திருக்குமோ என சந்தேகப்படும் அவர்கள், அவனுக்கு என்ன தான் ஆச்சு என்று ரோகிணியிடம் விசாரிக்கிறார்கள்.
34
பைத்தியக்கார டாக்டரிம் வைத்தியம் பார்த்த மனோஜ்
ஷோரூமுக்கு வந்த லேடி உனக்கு குழந்தையே பிறக்காது என சொன்னதால், பயத்தில் டாக்டரை போய் பார்த்திருக்கிறார். அந்த டாக்டர் தான் குழந்தைமாதிரி நடந்துகொண்டால் உனக்கு குழந்தை பிறக்கும் என சொல்லி இருக்கிறார். அதனால தான் அவர் இப்படியெல்லாம் பண்ணிகிட்டு இருக்காரு என சொல்கிறார் ரோகிணி. பின்னர் முத்து அந்த டாக்டர் நம்பர் வாங்கி போன் போட்டு கேட்டபோது தான் மனோஜ், பார்த்தது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரியவந்திருக்கிறது. பின்னர் அதை சொன்னதும் ஷாக் ஆகும் மனோஜ், தனக்கு அப்போதே டவுட் வந்ததாக சொல்லி சமாளிக்கிறார். அதற்கு முத்து நீ ஒரு வடிகட்டுனு முட்டாள்டா என திட்டுகிறார்.
இதையடுத்து ரோகிணிக்கு அவருடைய அம்மா லெட்சுமி போன் போடுகிறார். கிச்சனுக்கு சென்று பேசுகிறார் ரோகிணி. அப்போது தனக்கு வித்யா பத்திரிகை வைத்த விஷயத்தை சொல்கிறார். தானும் கல்யாணத்துக்கு வரட்டுமா என கேட்கிறார். அதற்கு ரோகிணி, தயவு செஞ்சு வந்திராத என சொல்கிறார். ஏனெனில் முத்துவும் மீனாவும் அந்த கல்யாணத்துக்கு வருவார்கள், அவர்கள் கண்ணில் பட்டுவிடாதே என சொல்கிறார். இப்படி ரோகிணி அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க அதை ஸ்ருதி கேட்டுவிடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.