சன் டிவியி, கோலங்கள் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் 2022 முதல் 2024 ஜூன் மாதம் வரை ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர், TRP குறைவு காரணமாக திடீர் என முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த தொடர் முடிவடையும் போது, இந்த சீரியலின் இரண்டாம் பாகம் உருவாவதை இயக்குனர் திருச்செல்வம் உறுதி செய்தார்.
25
Ethirneechal 2 serial launch date
அவர் சொன்னது போலவே அதிரடியான சில மாற்றங்களுடன், 'எதிர்நீச்சல் 2' சீரியல் உருவாகியுள்ளது. டிசம்பர் 23-ஆம் தேதி முதல்.. அதாவது வரும் திங்கள் முதல் வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில், மதுமிதாவுக்கு பதிலாக சீரியல் நடிகை பார்வதி நடிக்கும் நிலையில், கனிகா, பிரிய தர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஆகியோர் முதல் பாகத்தில் ஏற்று நடித்த வேடங்களிலேயே நடிக்கின்றனர். ஆனால் இந்த பாகத்தில், ஆதிமுத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது யார்? என்கிற கேள்வி மட்டும் இப்போது வரை பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இயக்குனரும் அந்த கதாபாத்திரத்தை ரிவீல் செய்யாமல் சீக்ரெட் மெயின்டெயின் செய்து வருகிறார்.
இந்நிலையில், எதிர்நீச்சல் தொடர் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்களின் நேரம் அதிரடியாக மற்றம் செய்யப்பட்டுள்ளது.
45
Ranjani Serial Timing Changed
அதன்படி, இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'ரஞ்சனி' சீரியல், இனி திங்கள் முதல் வாரம் 7 நாட்களும் இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மல்லி' தொடர், இனி திங்கள் முதல் வாரம் 7 நாட்களும், இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.