Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி ஆரவாரத்துடன் தொடங்கியது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார். ஆனால் இந்த முறை அவர் விலகியதால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதையடுத்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் எண்ட்ரி கொடுத்ததால் பிக் பாஸ் வீடே ஹவுஸ் புல் ஆனது.
Bigg Boss Tamil season 8 Contestants
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன், அருண் பிரசாத், விஜே விஷால், ரஞ்சித், ஜெஃப்ரி, தீபக், ராணவ், ரயான் ஆகிய 7 ஆண் போட்டியாளர்களும், ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா ஆகிய 5 பெண் போட்டியாளர்கள் என மொத்தமாக 12 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வீட்டில் கோஸ்டி மோதல்; சல்லி சல்லியாய் உடைந்த கோவா கேங்!
Ranjith
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் இருவர் தான். அதில் ஒருவர் ரவீந்தர், அவர் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகிவிட்டார். மற்றொருவர் ரஞ்சித். இவர்கள் இருவருக்குமே ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் ரஞ்சித் பாசத்தை காட்டியே பைனல்ஸ் வரை செல்லும் முனைப்பில் இருக்கிறார். இதுவரை 10 வாரங்கள் முடிந்துள்ள நிலையில், அவர் பெரியளவில் யாருடனும் சண்டை போட்டதில்லை.
Bigg Boss Ranjith Net Worth
அதுமட்டுமின்றி இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்குவது மட்டுமின்றி அதிக சொத்து மதிப்பு கொண்ட போட்டியாளாராகவும் ரஞ்சித் தான் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 4 முதல் 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆதித்யா என்கிற மகனும் இருக்கிறார். தன் மகன் ஆட்டிசம் பாதித்தவர் என்கிற தகவலை ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் கூறி இருந்தார். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் கவுண்டம்பாளையம் உள்பட சில படங்களை இயக்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... VJ Jacquline:ஒரு சர்ச்சையிலும் சிக்கல, செம வெயிட்டு பார்ட்டி; பிக்பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு இத்தன கோடியா?