
பாலிவுட் திரையுலகில் நுழைந்து தற்போது ரூ.50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறி உள்ள அட்லீ, கோடிக்கணக்கில் செலவு செய்து தன்னுடைய துணை இயக்குனர்களுக்கு செய்த உதவி குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து, பின்னர் 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியவர் அட்லீ. முதல் படத்திலேயே நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், ஆர்யா போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிய அட்லீ இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று விஜய் படங்களை இயக்கி, தளபதி தன் மீது வைத்த நம்பிக்கைக்கு பரிசாக ஹார்டிக் வெற்றியை அவருக்கு பரிசாக கொடுத்தார்.
தமிழ் சினிமாவில், இவர் இயக்கிய படங்கள் காப்பி சர்ச்சையில் சிக்கி இருந்தாலும்... வசூல் ரீதியாக அட்லீக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. எனவே தன்னுடைய அடுத்த படத்தை இயக்குனர் அட்லீ யாரை வைத்து இயக்குனர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக கோலிவுட் திரை உலகிற்கு குட் பை சொல்லிவிட்டு, பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். பல பிரச்சினைகளைக் கடந்து உருவான இந்த திரைப்படத்தை, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் சார்பில் கௌரி கான் தயாரித்திருந்தார்.
பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரிலீஸை கண்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது வரை ஷாருக்கானின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற பெயரையும் 'ஜவான்' பெற்று தந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8-ல் பணக்கார போட்டியாளர் இவர்தான்; சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழில் சில படங்களை தயாரித்துள்ள அட்லீ, பாலிவுட் திரையுலகிலும் தான் இயக்கிய 'தெறி' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தை அட்லி தான் தயாரித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற போல் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஹீரோவாக வருண் தவான் நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேபி ஜான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
திரை உலகில் தன்னுடைய அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அட்லீ, தன்னுடைய அடுத்த பட ஹீரோவாக அல்லு அர்ஜுனை தேர்வு செய்துள்ளார். அல்லு அர்ஜூனுக்கும் அட்லீ கூறிய கதை பிடித்து விட்ட நிலையில், கூடிய விரைவில் இத படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அட்லீ குறித்து யாருக்கும் தெரியாத ஒரு தகவலை கூறியுள்ளார். பொதுவாக டாப் நடிகர்கள் கூட தங்களுடன் பணியாற்றும் அல்லது தனக்கு கீழே உள்ள சிலரை பற்றி நினைத்து பார்ப்பது இல்லை. ஆனால் அட்லீ தன்னிடம் பணியாற்றி, ஒவ்வொரு படங்களுக்கும் தூணாக இருந்து உதவி செய்து வரும் உதவி இயக்குனர்களுக்கு... சென்னையிலேயே அவர்கள் குடும்பத்தோடு வசிக்க அவர்களின் பெயரில் பிளாட் வாங்கி கொடுத்துள்ளாராம். சென்னையில் ஒரு பிளாட் வாங்கவே 40 லட்சம் ஆகும் நிலையில், இவர் சுமார் 5-க்கும் மேற்பட்டோருக்கு வாங்கி கொடுத்துள்ளார். இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் அட்லீக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.