நெல்சா வேறமாறி... வேறமாறி... ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த மற்றுமொரு சூப்பர்ஸ்டார்...!

First Published | Jan 6, 2023, 12:04 PM IST

நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் மற்றுமொரு சூப்பர்ஸ்டார் நடிகரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. ரஜினியின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ஜெயிலர் படத்தையும் தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். அவர் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... ‘துணிவு - வாரிசு’க்கு முன்... 6 முறை நேருக்கு நேர் மோதிய ‘விஜய் - அஜித்’ படங்கள் - அதில் அதிக வெற்றி யாருக்கு?

Tap to resize

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் வஸந்த் ரவி, ரோபோ ஷங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இதுதவிர கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் மற்றுமொரு சூப்பர்ஸ்டார் நடிகரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறுயாருமில்லை, ரஜினியின் நண்பரும், மலையாள நடிகருமான மோகன்லால் தான். ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். அவரும், ரஜினியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் வருகிற ஜனவரி 8-ந் தேதி படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறையாகும். இப்படி ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ஷிவ ராஜ்குமார், மோகன்லால் என மூன்று திரையுலகை சேர்ந்த சூப்பர்ஸ்டார்களை நடிக்க வைக்கும் நெல்சனை அவர் பாணியிலே நெல்சா வேறமாறி... வேறமாறி... என வியந்து பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் பணியாற்றிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்... சோகத்தில் படக்குழு

Latest Videos

click me!