ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்து சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

Published : Feb 15, 2025, 04:34 PM ISTUpdated : Feb 15, 2025, 04:57 PM IST

ஒரே வருடத்தில் ஒரு 2 படத்தை ரிலீஸ் செய்ய பல நடிகர்கள் படாத பாடுபடும் நிலையில்... ஒரே வருடத்தில் பிரபல நடிகர் அசால்ட்டாக 36 படங்களில் நடித்துள்ளார். இது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

PREV
15
ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்து சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?
பான் இந்தியா படங்கள் அதிகரித்துவிட்டன:

இப்போதெல்லாம் பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் படங்கள் அதிகரித்துவிட்டன. இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே அதிகம். விஜய், அஜித், ரஜினி, கமல் NTR, மகேஷ் பாபு, ராம் சரண், என பெரும்பாலான தென்னிந்திய மொழி டாப் ஸ்டார் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். ஒரு சில நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க இரண்டு மூன்று வருடங்கள் கூட கஷ்டப்படுகிறார்கள். 

25
அந்த காலத்தில் ஒரே வருடத்தில் பல படங்களில் நடித்த நடிகர்கள்:

ஆனால் முன்பு, பெரிய நடிகர்கள் எல்லோரும் வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது நடிப்பார்கள். ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ஒரு வருடத்திற்கு 10 முதல் 15 படங்களில் கூட நடித்துள்ளனர். 

73 வயது நடிகருடன் ஜோடி சேருகிறாரா லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா?

35
ஒரே வருடத்தில் 36 படங்கள்

ஆனால் ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார் நடிகர் மம்முட்டி. 70 வயதைக் கடந்தும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவரின் இந்த தோற்றத்திற்கு காரணம் எந்நேரமும் ஏதாவது வேலையை செய்து கொண்டு, தன்னையும் - தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது என கூறியுள்ளார் அவரே கூறியுள்ளார்.
 

45
70 வயதிலும் இளமையான லுக்:

மம்முட்டி-யை தொடர்ந்து, இவருடைய மகன் துல்கர் சல்மானும் தற்போது அடுத்தடுத்து, பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். துல்கர் 40 வயதை கடந்துவிட்ட நிலையில், இவர்கள் இருவரையும் ஒரு சேர பார்த்தல், யாருமே அப்பா மகன் என கூற மாட்டார்கள். அண்ணன் - தம்பி என்றே சொல்வார்கள். காரணம் 70 வயதிலும் தன்னுடைய உடலை அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் மம்மூட்டி.

மௌனம் கலைத்த நடிகர் மம்முட்டி! ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பரபரப்பு கருத்து!
 

55
மம்மூட்டி செய்த சாதனை:

இன்று மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்மூட்டி, 1971ல் 'அனுபவங்கள் பாலிச்சகல்' என்கிற திரைப்படத்தில், சிறிய வேடத்தில் நடிக்க துவங்கி பின்னர், மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தவர் என பெயரெடுத்தவர். 1982ல் 24 படங்களில் நடித்த மம்முட்டி, 1983 முதல் 1986 வரை ஒவ்வொரு வருடமும் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மம்முட்டி 1983ல் 36 படங்களில் நடித்து புதிய சாதனை படைத்தார். மம்முட்டி ஒரு வருடத்தில் நடித்த 36 படங்களை அவரது மகன் துல்கர் சல்மான் நடிக்க 13 வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories