9 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்!

Published : Feb 15, 2025, 03:25 PM IST

தமிழ் சினிமாவில் அமரன் படம் மூலம் ரூ.300 கோடி வசூல் நாயகனாக மாறி உள்ள சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம், 9 வருடங்களுக்கு பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
16
9 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கிய சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி, பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியிலேயே தொகுப்பாளராக மாறியவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய திறமையை நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்ட சிவகார்த்திகேயன், பல சின்னத்திரை சீரியல் வாய்ப்புகள் கிடைத்த போதும், அதை தவிர்த்து விட்டு வெள்ளி திரையில் நிலைத்து நிற்க வேண்டும் என போராடி வந்தார்.

26
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படம்:

இவருடைய விடாமுயற்சியை பார்த்து இயக்குனர் பாண்டிராஜ், 2012 ஆம் ஆண்டு தன்னுடைய இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், சிவகார்த்திகேயனின் டைமிங் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நடிகை ஓவியா நடித்திருந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, சிவகார்த்திகேயனுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான மூன்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தோல்வியில் முடிந்த முதல் காதல்; யார் அந்த பெண்? மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

36
3 படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்:

தனுஷின் பள்ளி பருவ நண்பராக சிவகார்த்திகேயன் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்றாலும். சிவகார்த்திகேயனின் ஹீரோ இமேஜ் பாதிக்கப்படும் என்கிற காரணத்தால் இயக்குனர் பாண்டிராஜ் 3 படத்தில் அவரை முழு காமெடியனாக காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் பள்ளி பருவ நண்பனாக மட்டுமே நடித்திருந்தார். பின்னர் இந்த படத்தில் இருந்து விலகினார். இந்த தகவலை இயக்குனர் பாண்டிராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

46
கீர்த்தி சுரேஷுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய ரஜினி முருகன்

அடுத்தடுத்து காமெடி கலந்த, ஹீரோயிசம் கான்செப் கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, போன்ற படங்கள் நல்ல வரவைப்பை பெற்றன.  

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தான் 'ரஜினி முருகன்'. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் செய்யும் காமெடி அலப்பறையும், ரசிகர்களை ரசிக்க வைத்தது. 

அந்த பழக்கத்தை விட்ட பின்பு தான் தெளிவு வந்துச்சு; சிவகார்த்திகேயன் பகிர்ந்த சீக்ரெட்!
 

56
சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ரீ-ரிலீஸ்

இந்த படத்தில், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, நமோ நாராயணா, வேல ராமமூர்த்தி, உள்ளிட்ட பல நடித்திருந்தனர். ரூ.22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் ரிலீசாக இந்த திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்திருந்தார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஜினி முருகன் வெளியாகி சுமார் 9 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை பட குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

66
அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்கள்

சமீப காலமாக பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் ஒருபுறம் ரீ-ரிலீஸ் ஆகி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல் திரையரங்கில் வெளியான போது தோல்வியை தழுவிய பாபா, கில்லி, 3,ஆளவந்தான், போன்ற படங்கள் ரீ-ரிலீஸின் பொது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தளபதி விஜய்யின் சச்சின் படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ரஜினி முருகன் மார்ச் மாதம் ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!

click me!

Recommended Stories