கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

Published : Feb 15, 2025, 12:57 PM IST

Meera Jasmine Net Worth : டாக்டராக ஆசைப்பட்ட நடிகை மீரா ஜாஸ்மினின் 43ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகிருக்கிறது.

PREV
16
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

Meera Jasmine Net Worth : மாதவன் நடித்த ரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவரது உண்மையான பெயர் ஜாஸின் மேரி ஜோசஃப். கேரளா மாநிலம் திருவல்லாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். Paadam Onnu: Oru Vilapam (பாடம் ஒன்னு ஒரு விளாபம்) என்ற மலையாள படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, சண்டகோழி, விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது என்று ஏரளமான படங்களில் நடித்துள்ளார்.

26
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே மீரா ஜாஸ்மினுக்கு ஹிட் கொடுத்தது. மற்ற படங்கள் எல்லாமே தோல்வி படமாக அமைந்தது. இதனால் தமிழ் சினிமாவில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிப்புக்கும், அழக்குக்கும் எந்த குறையும் இல்லாத நிலையில், சரியான கதையை தேர்வு செய்வதில் மட்டும் மீரா ஜாஸ்மின் கோட்டைவிட்டுள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது துபாயில் மென் பொறியாளராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த அனில் ஜான் டைட்டஸை 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

36
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

இது நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணம். மீராவின் பெற்றோர் அவருக்கு வரன் தேடிக் கொண்டிருந்த போது மேரேஜ் வெப்சைட்டி அனில் ஜான் டைட்டஸின் புரபைலை பார்த்துள்ளனர். அதன் பிறகு மீராவின் சம்மதம் பெற்ற நிலையில், மீரா ஜாஸ்மின் மற்றும் அனில் ஜான் டைட்டஸ் இருவருக்கும் திருவனந்தபுரம் பாளையத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இது நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணம். மீராவின் பெற்றோர் அவருக்கு வரன் தேடிக் கொண்டிருந்த போது மேரேஜ் வெப்சைட்டி அனில் ஜான் டைட்டஸின் புரபைலை பார்த்துள்ளனர். அதன் பிறகு மீராவின் சம்மதம் பெற்ற நிலையில், மீரா ஜாஸ்மின் மற்றும் அனில் ஜான் டைட்டஸ் இருவருக்கும் திருவனந்தபுரம் பாளையத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

46
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்ய முன் வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது, விவாகரத்து பெற்றார்களா அல்லது இருவரும் சேர்ந்து வாழ்கிறார்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. திருமணத்திற்கு முன்னதாக மீரா ஜாஸ்மின் இயக்குநர் லோஹிதா தாஸை காதலிப்பதாக தகவல் வெளியானது. இயக்குநர் ஏ கே லோஹிதாதாஸ் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் முதல் முறையாக நடித்த மலையாள படமான சூத்ரதாரன் என்ற படத்தின் மூலமாக இருவரும் நெருங்கி பழகிய நிலையில் கஸ்தூரிமாஸ் படத்தில் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

56
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

மீரா ஜாஸ்மின் புதுமுகம் என்பதால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், லோஹிதாதாஸ் அதனை மறுத்தார். இதே போன்று கர்நாடக பாரம்பரிய இசைக்கலைஞரான உப்பலப்பு ராஜேஷ் (மாண்டலின் ராஜேஷ்) மற்றும் மீரா ஜாஸ்மின் இருவரும் காதலித்ததாகவு டேட்டிங் சென்றதாகவும் தகவல் பரவியது. ஆனால், அவர்களது காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம். கடைசியில் தான் அனில் ஜான் டைட்டன்ஸ் என்பதை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டு தகவலின் படி அவருடைய சொத்து மதிப்பு ரூ.40 கோடியாம். ஆனால் இப்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

66
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?

மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாக அவர் மருத்துவராக விரும்பியுள்ளார். கனவில் கூட நடிகையாக வேண்டும் என்று அவர் நினைத்து பார்த்ததில்லையாம். பள்ளி டிராமாவில் கூட நடித்ததில்லை. எனக்கு டான்ஸ் ஆட தெரியும், நான் என்னை அழகாக இருப்பதாக எண்ணிக் கொண்டதில்லை. லோஹிதாஹாஸ் தான் என்னுடைய குரு, அவர் தான் என்னை சினிமாவில் அறிமுகம் செய்தார் என்று ஒரு நிகழ்ச்சியிலவர் பேசியிருக்கிறார். இவருடைய சகோதரர் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories