ரஜினிகாந்த் டயலாக்கை கரெக்ட் செய்தார் சிவகுமார்; சூர்யாவிடம் சத்யராஜ் பகிர்ந்த சீக்ரெட்!

Published : Feb 15, 2025, 12:57 PM ISTUpdated : Feb 15, 2025, 07:49 PM IST

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கிய போது, அதில் சிறப்பு விருந்தினராக சத்யராஜ் கலந்து கொண்டு, பகிர்ந்த சுவாரசியமான தகவல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
16
ரஜினிகாந்த் டயலாக்கை கரெக்ட் செய்தார் சிவகுமார்; சூர்யாவிடம் சத்யராஜ் பகிர்ந்த சீக்ரெட்!
ரஜினி மற்றும் சிவகுமார்:

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80-ஆகிய இடைப்பட்ட காலத்தில், ஒரு படத்தில் இரண்டு மூன்று ஹீரோக்கள் நடிப்பது வழக்கமாக இருந்தது. அந்த வகையில், ரஜினி மற்றும் சிவகுமார் இணைந்து நடித்த 'புவனா ஒரு கேள்விகுறி' படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான தகவலை தான் சத்யராஜ், சூர்யாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூறி ஒட்டு மொத்த அரங்கையே சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளார்.
 

26
புவனா ஒரு கேள்வி குறி:

இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், 1977-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'புவனா ஒரு கேள்வி குறி'. சுமித்ரா கதாநாயகியாக நடிக்க சிவக்குமார் - ரஜினிகாந்த் ஆகியோர் கதாநாயகனாக நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவக்குமார் ஒரு பிளேபாய் போல் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க, ரஜினிகாந்த் நாகராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நேர்மறையான ரோலில் நடித்திருப்பார்.

1000 கோடி வசூலுக்கு ரெடியான ரஜினிகாந்தின் கூலி; எப்போ ரிலீஸ் தெரியுமா?
 

36
நாகராஜால் ஏமாற்றப்படும் புவனா :

நாகராஜ் கதாநாயகி புவனாவை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி கைவிடுகிறார். அணைத்து உறவுகளையும் இழந்து தன்னந்தனியாக நிற்கும் அவளை பெண்ணான புவனாவை தன்னுடைய நண்பன் தான் இந்த நிலைக்கு ஆளாக்கினார் என்பதால், அந்த பெண்ணின் குழந்தைக்காக அவளை ஏற்று கொள்கிறார். புவனாவின் குழந்தை சம்பத் (ரஜினிகாந்தை) அப்பா என அழைத்தாலும், -  சம்பத்தும் பிரிந்தே வாழ்கிறார்கள்.

46
குழந்தையை விட்டு கொடுக்க மறுக்கும் சம்பத்:

பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் நாகராஜுக்கு குழந்தை பிறக்காது என கூற, புவனா மூலம் தனக்கு பிறந்த குழந்தையை தத்தெடுக்க நினைக்கிறார். குழந்தை உடல்நலம் குன்றி ஒரு ஊசி போட்டால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறும் போது, குழந்தைக்கு அந்த ஊசியை வாங்க நான் பணம் கொடுக்கிறேன். ஆனால் குழந்தை தனக்கு வேண்டும் என பேரம் பேசுவது போன்ற காட்சிகளில், சிவகுமார் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சம்பத் எப்படியோ பணத்தை பிரட்டி குழந்தையை காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில், சம்பத் அதீத புகை பழக்கம் மற்றும் மது காரணமாக மாரடைப்பில் இறக்க, புவனா விதவையாக தன்னுடைய வாழ்க்கையை தொடர்கிறார். 

தமிழ்நாடு செழிப்பாக உள்ளது; "கலைஞர்" விருது பெற்ற சத்யராஜ் - முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம்!
 

56
சத்யராஜ் பகிர்ந்த தகவல்:

இந்த படத்தில் சத்யராஜ் நடிக்கவில்லை என்றாலும், இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அங்கு தான் இருந்தாராம். அப்போது ரஜினிகாந்த் பேசிய வசனத்தை, சிவக்குமார் அன்னான் சரி செய்ததாக சூர்யாவிடம் கூறியுள்ளார். அதுவும் அவர்களை போலவே மிமிக்கிரி செய்து கொண்டு சத்யராஜ் பேசியது தான் செம்ம ஹை லைட். " ரஜினிகாந்த் சிவகுமாரை பார்த்து... "நாகராஜ் நீ கடப்பாரை முழுங்கிட்டு அதை ஜீரணம் பண்ண சுக்கு கசாயம் சாப்பிடுற, கடப்பாரை ஜீரணமாகாது வயித்தை கிழிச்சிடும். என்கிற டயலாக்கை தான் பேச வேண்டுமாம். இதை ரஜினிகாந்த் வேகமாக பேச... உடனே சிவகுமார், இது நல்ல டயலாக் இவ்வளவு வேகமா பேசுனா யாருக்கும் புரியாது என கூறி, அவருடைய ஸ்டைலில் நடித்து காண்பித்தாராம்.

66
சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி:

மேலும் இந்த படத்தில் நடித்த ரஜினி சார் மற்றும் சிவகுமார் அண்ணனுக்கு இந்த டயலாக்குகள் மறந்திருந்தாலும் இதனை ஒரு ஓரமாக நின்று பார்த்த எனக்கு மறக்கவில்லை என கூறியுள்ளார். சத்யராஜ் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகை ராதாவுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சாமிய திட்றதால என் மனைவி கோமாவில் இருக்கிறாரா? சத்யராஜ் கொடுத்த நெத்தியடி பதில்

click me!

Recommended Stories