குடிபோதையில் ஷூட்டிங்கிற்கு வந்த 2 நடிகர்களுக்கு தடைவிதிப்பு - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை

First Published | Apr 26, 2023, 6:13 PM IST

குடிபோதையில் படப்பிடிப்பிற்கு வந்து அலப்பறை செய்து வந்த பிரபல மலையாள நடிகர்கள் இருவர் மீது அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையாள திரையுலகில் சர்ச்சைக்குரிய நடிகர்களாக வலம் வந்த ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவருக்கும் தற்போது நடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் குடிபோதையில் ஷூட்டிங்கிற்கு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மற்றவர்களுக்கு பிரச்சனை கொடுக்கும் விதமாக நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வரும் அவர்கள் இருவர் மீதும் கேரள திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பான ஃபெஃப்கா மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து இந்த தடை நடவடிக்கையை எடுத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இனி அவர்கள் இருவரும் படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.. அரசியல்னா எனக்கு என்னன்னே தெரியாது; கண்டிப்பா வரமாட்டேன் - என்ன நடிகர் விஜய் இப்படி சொல்லிருக்காரு!

Shane Nigam

ஷேன் நிகாம் மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த நீல ஆகாசம் பச்சக் கடல் சுவாச பூமி என்கிற படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கும்பலிங்கி நைட்ஸ், கிஸ்மத், வெயில், இஷ்க் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் கொரோனா பேப்பர்ஸ் என்கிற திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில் இவர் ஆர்.டி.எக்ஸ் என்கிற படத்தில் நடித்தபோது படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக்கூறி பாதியிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tap to resize

Sreenath Bhasi

அதேபோல் தடை செய்யப்பட்ட மற்றொரு நடிகரான, ஸ்ரீநாத் பாஷி, டிரான்ஸ், கும்பலிங்கி நைட்ஸ், ஆகாச கங்கா 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் கடந்தாண்டு படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை கொடுத்தபோது பேட்டி எடுத்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசி அவரிடம் ரகளையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தான் அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. இவர் தான் வேண்டும் அடம்பிடித்தாரா விஜய்? தளபதி முதல்கொண்டு 4 ஹீரோக்களை அழகில் மயக்கிய நடிகை மந்த்ரா!

Latest Videos

click me!