தளபதி விஜய் கூட மந்த்ராவின் அழகிற்கு மயங்கியவர் தான் என்கிற கிசுகிசுவும், கோலிவுட் திரையுலகில் சுற்றி கொண்டு தான் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், லவ் டுடே. இந்த படத்தில் கதாநாயகி சுவலட்சுமி என்றாலும், அவரின் தோழி கதாபாத்திரத்தில்... அதாவது இரண்டாவது ஹீரோயின் போன்ற கதாபாத்திரத்தில் மந்த்ரா தான் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் பல நடிகைகள் பெயரை கூறியும் மந்த்ரா தான் நடிக்க வேண்டும் என விஜய் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.