நடிகை பூனம் பாஜ்வா கடந்த 2005-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த இவரை தமிழுக்கு அழைத்து வந்தது இயக்குனர் ஹரி தான். அவர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பூனம் பாஜ்வா.
சேவல் படத்தின் வெற்றிக்கு பின் பூனம் பாஜ்வாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்ததாக ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து அசத்தி இருந்தார். பின்னர் சுதா கொங்கரா இயக்கிய துரோகி மற்றும் நரேனுக்கு ஜோடியாக தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.
அப்படத்துக்கு பின் சுந்தர் சி உடன் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்த பூனம் பாஜ்வாவுக்கு வயதும் ஏறிக்கொண்டே சென்றதால், அவருக்கான மவுசும் சினிமாவில் குறைந்துவிட்டது. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குருமூர்த்தி. இப்படத்தில் நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதன்பின் பட வாய்ப்புகள் இல்லாததால் அப்செட்டில் இருந்துவந்த பூனம் பாஜ்வா, எப்படியாவது பட வாய்ப்புகளை தட்டித்தூக்க வேண்டும் என்கிற முடிவோடு தற்போது போட்டோஷூட் பக்கம் திரும்பி உள்ளார். அதுவும் சாதரணமான போட்டோஷூட் இல்லை. ஆரம்பமே பிகினி போட்டோஷூட் தான்.