குடும்பத்தோடு பொன்னியின் செல்வன் படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - வைரலாகும் போட்டோஸ்

First Published | Oct 20, 2022, 11:27 AM IST

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் சென்று கொழும்புவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. பான் இந்தியா படமாக ரிலீசான இப்படத்திற்கு அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதனால் படக்குழுவும் செம்ம ஹாப்பியாக உள்ளது.

உலக அளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்த பொன்னியின் செல்வன் திரைப்படம், மூன்று வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரகாக ஓடி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் சென்று கொழும்புவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தப்பித்த தனலட்சுமி... டேஞ்ஜர் ஜோனில் சிக்கிய 3 பேர் - பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவரா?

Tap to resize

அவருடன் அந்நாட்டின் தமிழ் எம்.பி.க்கள் சிலரும் படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சே தியேட்டரில் மனைவியுடன் அமர்ந்து பொன்னியின் செல்வன் படம் பார்த்தபோது எடுத்த புகைபப்டங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்து சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டபோது மக்கள் அனைவரும் அங்குள்ள அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். அப்போது அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும், மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி பதவியை ராஜினாமா செய்ததோடு, நாட்டை விட்டே ஓடி வெளிநாட்டில் தஞ்சமடைந்தனர். நிலைமை சீரான பின்னர் தன் அவர்கள் இருவரும் நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சூப்பர்மாடல் எங்கே?... போலீசுக்கே தண்ணிகாட்டும் மீரா மிதுன் - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

Latest Videos

click me!