பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். அந்நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர், தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டதால கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் பற்றி அவதூறாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து இருவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். பின்னர் இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது சாம் மட்டுமே ஆஜரானார். முக்கிய குற்றவாளியான மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவு ஆனதை அடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமறைவாக உள்ள மீரா மிதுனை இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்த போலீஸ், அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஆண்ட்டினு சொன்ன அசல் கோளார்.... டார் டாராக கிழித்த தனலட்சுமி..! பிக்பாஸ் வீட்டில் நடந்த மிகப்பெரிய சண்டை