நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 'ரன்' படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் இந்த மலையாள கிளி, மீரா ஜாஸ்மின். பின்னர் விஜய், அஜித், பிரஷாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து... முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா... போன்ற நடிகைகளுக்கு நடிப்பிலும், அழகிலும் டஃப் கொடுத்த மீரா, திடீர் என தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.
திருமணத்திற்கு பின்னர் உடல் எடை கூடிய மீரா ஜாஸ்மின், தற்போது கடின உடற்பயிற்சிகள் மற்றும் டயட் மூலம் உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். பார்ப்பதற்கு 20 வயது நாயகி போல் ஜொலிக்கும் இவர் அவ்வப்போது உச்ச கட்ட கவர்ச்சி உடையில் தன்னுடைய கட்டழகை வெளிப்படுத்தும் விதத்தில் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.