பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், கிடைக்கும் பிரபலத்தால் மிகவும் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்கிற நோக்கத்தில் தான் வெளிநாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இவர் எதார்த்தமாக பேசுவது கூட சில சமயங்களில் காமெடியாக மாறி விடுகிறது. அதே போல் இவரது உடல் மொழியும் இவருக்கு மிகப்பெரிய ப்ளஸ் என கூறலாம். மற்ற போட்டியாளர்களை விட இவர் எவ்வித நடிப்பும் இல்லாமல் எப்போதும் போல் இருப்பதால், இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என இப்போதே சிலர் கணித்து கூற துவங்கி விட்டனர்.
இந்நிலையில் ஜிபி முத்து அவரது சகோதரர் ஆனந்த-யை பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறும் கெஞ்சியுள்ளார். ஜி.பி.முத்துவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வரும் நிலையிலும் இவர் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.