தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதுமட்டுமின்றி இவர்களது திருமண புகைப்படங்கள் அதிகளவில் ட்ரோலும் செய்யப்பட்டன. குறிப்பாக மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது.
வழக்கமாக மகாலட்சுமி உடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு, ரொமாண்டிக் கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் ரவீந்தர். நேற்று போட்ட பதிவு தற்போது பேசு பொருள் ஆகி வருகிறது. அந்த பதிவில் தான் சிங்கிளாக நின்றபடி எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரவீந்தர் சோகமான கேப்ஷனை கொடுத்துள்ளார். அந்த பதிவி தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள்.. ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். ரவீந்தரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மனைவியுடன் சண்டையா என கேள்வி கேட்டு வருகின்றனர். வழக்கமாக ரவீந்தரின் பதிவிற்கு கமெண்ட் செய்யும் மகாலட்சுமி, இந்த பதிவிற்கு எந்தவித ரிப்ளையும் செய்யாமல் உள்ளார்.
இதையும் படியுங்கள்... காட்டுக்குள் அருவி போல் கவர்ச்சியை கொட்டிய யாஷிகா ஆனந்த்