மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்! அஜித்தின் கார் ரேஸை பார்க்க படையெடுத்து வந்த கோலிவுட்!

First Published | Jan 13, 2025, 9:10 AM IST

நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணி துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் ரேஸில் கலந்துகொண்ட நிலையில், அவரை சப்போர்ட் பண்ண ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் சென்றிருக்கிறார்கள்.

Ajithkumar Car Race

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு கார் ரேஸ் என்றால் அலாதி பிரியம். சினிமாவுக்காக சில ஆண்டுகள் கார் ரேஸில் பங்கேற்காமல் இருந்த அஜித், தற்போது மீண்டும் அதில் களமிறங்கி இருக்கிறார். இதற்காக துபாயில் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அஜித், தன்னுடைய அணியுடன் கார் ரேஸில் கடந்த ஜனவரி 11ந் தேதி களமிறங்கினார். சுமார் 24 மணிநேரம் இடைவிடாது கார் ஓட்டும் பந்தயமான இதில், இறுதியில் யார் அதிக தூரம் கார் ஓட்டி இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

Ajith Car Race in Dubai

அந்த வகையில் இந்த ரேஸில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடம்பிடித்து அசத்தியது. அஜித் பங்கேற்றதால் இந்த கார் ரேஸ் பார்க்க துபாயில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களின் பேரன்பால் திளைத்து போன அஜித், அவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்தார். அஜித்தின் கார் ரேஸை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்ல சினிமா பிரபலங்களும் ஏராளமானோர் படையெடுத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tap to resize

Shalini

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவோடு வந்து கார் ரேஸை கண்டுகளித்தார். அஜித் கார் ஓட்டும் போது அவருக்காக கத்தி ஆரவாரம் செய்த ஷாலினி, அவர் வெற்றிபெற்றதும் கட்டிப்பிடித்து அவருக்கு லிப் கிஸ் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Aarav Support Ajith

அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஆரவ்வும் அஜித்தின் கார் ரேஸை பார்க்க துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு கையில் அஜித்தின் கார் எண் கொண்ட பதாகைகளை ஏந்தி, அஜித்தின் ரசிகராக மாறி அவருக்கு தன்னுடைய சப்போர்டை தெரிவித்தார் ஆரவ்.

இதையும் படியுங்கள்... கார் ரேஸில் சாதனை – சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்த அஜித்!

Arjun Das

விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து பேமஸ் ஆன அர்ஜுன் தாஸும் அஜித்தின் கார் ரேஸை கண்டுகளிக்க துபாய்க்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Madhavan, Ajithkumar

நடிகரும் அஜித்தின் நண்பருமான மாதவனும் துபாயில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை நேரில் கண்டுகளித்தார். அப்போது அஜித் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு நடிகனாக வரவில்லை, அஜித்தின் ரசிகனாக வந்திருக்கிறேன் என்று சொல்லிய மாதவன், அஜித்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Adhik

நடிகர் அஜித்தின் வெறித்தனமான ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் துபாய் சென்று அஜித் கார் ரேஸ் ஓட்டியதை நேரில் கண்டுகளித்தார். இவர் தற்போது அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வருகிறது.

VIshnuvardhan

இயக்குனர் விஷ்ணு வர்தனும் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசித்தார். நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரான இவர், அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்: கார் விபத்துக்கு பிறகு கம்பேக் கொடுத்த அஜித்!

Latest Videos

click me!