Madha Gaja Raja
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான திரைப்படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த பிரச்சனை எல்லாம் தீர்க்கப்பட்டு ஒருவழியாக இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
Varalaxmi, Anjali
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் மற்றும் பாலா இயக்கிய வணங்கான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதால் விஷால் படம் போனி ஆகுமா என்கிற அச்சமும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் அடிச்சுதூக்கி இந்த ஆண்டு ரியல் பொங்கல் வின்னராக மதகஜராஜா ஜொலிக்கிறது. இப்படம் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என சொன்னால் நம்ப முடியாத அளவுக்கு புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் vs வணங்கான் vs மதகஜராஜா! பொங்கல் வின்னர் யார்?
Vishal, Sadha
மதகஜராஜா படத்தின் மிகப்பெரிய பிளஸ்ஸே சந்தானம் தான். அவர் செய்யும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. சந்தானம் படம் முழுக்க ஸ்கோர் பண்ணினாலும், மனோபாலா இரண்டாம் பாதியில் ஒரு பத்து நிமிட நான் ஸ்டாப் காமெடி மூலம் மக்களின் வயிற்றை பதம் பார்த்து இருக்கிறார். இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்கிற ஃபீலை கொடுக்கக்கூடிய படமாக மதகஜராஜா உள்ளது. அஞ்சலி மற்றும் வரலட்சுமி கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். முகம் சுழிக்காத அளவு கவர்ச்சி இருப்பதே இப்படத்தின் பிளஸ்.
Madha Gaja Raja Day 1 Box Office Collection
மதகஜராஜா ஓடுமா ஓடாதா என்கிற டவுட்டில் இருந்தவர்களுக்கு இப்படம் முதல் நாளே வசூல் மழை பொழிந்து மாஸ் காட்டி உள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வணங்கான் படமே முதல் நாளில் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் மதகஜராஜா திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.3 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸிலும் வின்னராக திகழ்ந்துள்ளது. அடுத்து பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால் இப்படம் நிச்சயம் வசூல் வேட்டையாடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பொங்கல் வின்னர் ஆனாரா மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ