கார் ரேஸில் சாதனை – சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்த அஜித்!

Published : Jan 12, 2025, 06:03 PM IST

Ajith Lip Lock Kiss to his Wife Shalini : துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் அணி 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்துக்கு ஷாலினி லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
17
கார் ரேஸில் சாதனை – சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்த அஜித்!
Ajith Lip Lock Kiss to his Wife Shalini

Ajith Lip Lock Kiss to his Wife Shalini : கார் ரேஸ் பயிற்சியின் போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக விபத்தை சந்தித்த அஜித் இன்று அந்த கார் ரேஸில் வெற்றி பெற்று 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சினிமாவில் ஆக்‌ஷன் காட்சிக்கு பெயர் பெற்ற அஜித்துக்கு கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால், இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்கள் வெளியாக இருக்கின்றன. பைக் மற்றும் கார் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித்.

27
Ajith Race Event, Ajith 24H Race Event, Dubai Car Race

படங்களில் அஜித் பைக் ரேஸ் செய்து பார்த்திருப்போம். ஆனால், கார் ரேஸ் செய்த காட்சிகளை மட்டும் அவ்வளவாக பார்த்திருக்க மாட்டோம். இந்த நிலையில் தான் தற்போது துபாயில் நடைபெற்று வரும் 24ஹெச் சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமார் கலந்து கொண்டார். இதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக துபாயிலிருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதோடு, கார் ரேஸ்க்கான காரையும் வடிவமைத்தார்.

37
Ajith 24H Race Event, Dubai Car Race

இதையடுத்து நேற்றும், இன்றும் துபாயில் கார் ரேஸ் போட்டி நடைபெற்றது. இந்த தொடருக்கு முன்னதாக அஜித் கார் ரேஸ் பயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரேக் செயலிழந்த நிலையில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பினார். இதைத் தொடர்ந்து கார் ரேஸுக்கு முன்னதாக தனக்கு கார் ரேஸ் தான் முக்கியம். ஆதலால் இனி 9 மாதங்களுக்கு சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

47
Ajith Kumar Shalini Liplock Kiss, Ajith Lip Lock Kiss to Shalini

இதைத் தொடர்ந்து, கார் ரேஸிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ஆனால், அறிவித்து கொஞ்ச நேரத்திலேயே அவர் கார் ரேஸில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறி கடைசியாக 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 991 பிரிவில் 3ஆவது இடம் பிடித்த அஜித், ஜிடி4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸாகவும் வெளிப்பட்டார்.

57
Ajith Kumar Filmography, Vidaamuyarchi, Ajith Movie

இந்த நிலையில் தான் தனது வெற்றியின் வெளிப்பாடாக மனைவி ஷாலினிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி பரிசு பெறும் மேடைக்கு வந்தார். அப்போது தனது அணி வீரர்களை முதலில் மேடையேற்றிய பிறகே கடைசியாக தான் மேடையேறினார்.

67
Ajith 24H Car Race, Ajith 24H Car Race 991 Category

அந்த நிகழ்வின் போது அஜித்தின் மகன் ஆத்விக்கும் உடன் இருந்தார். கார் ரேஸில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற சாதனையை அஜித் குமார் படைத்துள்ளார். இதன் மூலமாக இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். மேலும், ஒரு நடிகராக சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து கிடைத்த வெற்றியை விட இன்று ஒரு கார் ரேஸராக அஜித் படைத்திருக்கும் இந்த சாதனை அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்திருக்கும்.

77
Ajith Kumar, Ajith Kumar Car Race, Ajith Car Race

அஜித்தின் இந்த சாதனை அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தையும், ஊக்கத்தையு கொடுத்துள்ளது. கார் ரேஸுக்காக அஜித் கிட்டத்தட்ட 25 கிலோ வரையில் தனது உடல் எடையை குறைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதை நேரடியாக சென்று பார்த்த நடிகர் மாதவன் தனது எக்ஸ் பக்கத்தில் ரொம்பவே பெருமையாக இருக்கு, என்ன ஒரு மனிதர். ஒரே ஒரு அஜித் குமார் என்று குறிப்பிட்டு அவருக்கு சல்யூட் அடிக்கும் எமோஜிகளை பதிவிட்டுள்ளார். மேலும், அவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அஜித்தின் இந்த வெற்றிக்கு சிவகார்த்திகேயன், விஜய் வசந்த், பிரசன்னா, கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories