காலில் கட்டு போட்டு கன்னத்தில் கைய வச்சு சைலண்டா உட்கார்ந்திருந்த ராஷ்மிகா மந்தனா!

First Published | Jan 12, 2025, 3:23 PM IST

Rashmika Mandanna Gives Explanation about her leg Injury : நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் கட்டு போட்ட நிலையில் மன்னிப்பு கேட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna injured while gym workout

Rashmika Mandanna injured while gym workout : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இப்போது தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அதன் பிறகு விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த புஷ்பா 2 படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. அதிலேயும் பீலிங்க்ஸ் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் கொடுத்தது. தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அறிமுகமானார். அனிமல் என்ற படத்தில் நடித்தார்.

Tap to resize

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயீன் ராஷ்மிகா மந்தனா என்று சொல்லும் அளவிற்கு தனது எக்‌ஸ்பிரஷனால் ரசிகர்களை கவர்ந்தார். இப்போது இவரது நடிப்பில் குபேரா, சிக்கந்தர், தமா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தான் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வலது காலில் கட் போட்டபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு சரி, இதுதான் என்னுடைய புத்தாண்டு என்று நினைக்கிறேன். எனது புதிய ஜிம்மில் நான் காயம் அடைந்தேன். சில வாரங்கள் அல்லது மாதங்கள் இது தான் ஹாப் மோடு. கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். தமா, குபேரா மற்றும் சிக்கந்தர் செட்டுக்கு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநர்கள் என்னை மன்னிக்கவும், எனது கால்கள் ஆக்‌ஷனுக்கு அல்லது குதிப்பதற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொண்டால் போதும் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!