போதைக்கு அடிமையான காதலி; பிரேக் அப்பில் முடிந்த அஜித்தின் முதல் காதல் பற்றி தெரியுமா?

First Published | Jan 13, 2025, 8:24 AM IST

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் அஜித், அதற்கு முன் நடிகை ஒருவரை காதலித்து அந்த காதல் பிரேக் அப்பில் முடிந்தது.

Ajith, Shalini

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறையாத காதலுடன் அஜித்தும், ஷாலினியும் இருப்பது பலரும் வியந்து பார்க்கும் விஷயமாகும். இது ஒரு புறம் இருக்க, அஜித்தின் முதல் காதல் பற்றி யாரும் பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது பிரேக் அப்பில் முடிந்த கதையை பற்றி பார்க்கலாம்.

நடிகர் அஜித் ‘என் வீடு என் கணவர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவருக்கு முதன்முதலில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது காதல் கோட்டை தான். 

Heera, Ajith

அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீரா நடித்திருந்தார். அப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகவும் மாறியது. காதல் கோட்டை படத்துக்கு பின்னர் அஜித்தும், ஹீராவும் தொடரும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

அந்த சமயத்தில் அஜித் நடிகை ஹீராவை காதலிப்பது கோலிவுட்டுக்கே தெரியும். அந்த சமயத்தில் அஜித் ஹீராவுக்காக பல்வேறு காதல் கடிதங்களை எழுதி இருந்தார். அதில் சில கடிதங்கள் லீக் ஆகின. அந்த கடிதத்தின் மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீராவின் அம்மா முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் திருமணம் செய்துகொண்டால் மகளின் கெரியர் குளோஸ் ஆகிவிடும் என அவர் அஞ்சினாராம்.

இதையும் படியுங்கள்... கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்: கார் விபத்துக்கு பிறகு கம்பேக் கொடுத்த அஜித்!

Tap to resize

Heera

பின்னர் போகப்போக ஹீராவின் பழக்க வழக்கங்கள் அஜித்துக்கு பிடிக்காமல் போனதால் அவர்கள் இருவரும் கடந்த 1998-ம் ஆண்டு பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். இந்த காதல் முறிவு பற்றி அஜித்தே பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில், நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. அவர் ஒரே மாதிரியாக இல்லை. சொல்லப்போனால் அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார் என தெரிவித்திருந்தார்.

Shalini ajithkumar

ஹீராவை பிரேக் அப் செய்து பிரிந்த அடுத்த ஆண்டே நடிகை ஷாலினி மீது காதல் வயப்பட்டார் அஜித், அமர்க்களம் பட ஷூட்டிங்கில் ஷாலினியை பார்த்த உடனே அவர் மீது காதலில் விழுந்துவிட்டாராம் அஜித். குறிப்பாக அப்பட ஷூட்டிங்கின் போது ஷாலினியின் கையில் கத்தி பட்டு ரத்தம் வந்ததால் துடிதுடித்துபோன அஜித் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அக்கறையோடு பார்த்துக்கொண்டாராம். அவரின் இந்த குணத்தால் தான் ஷாலினிக்கு அஜித் மீது காதல் வந்ததாம். அப்படம் முடித்ததும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கார் ரேஸில் சாதனை – சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்த அஜித்!

Latest Videos

click me!