Rolex ரேஞ்சுக்கு சூர்யாவுக்கு ஒரு ரோல்... ராக்கெட்ரி மூலம் மாதவன் சாதித்தாரா? சோதித்தாரா? - முழு விமர்சனம் இதோ

First Published Jul 1, 2022, 8:04 AM IST

Rocketry Review : இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மாதவனின் ராக்கெட்ரி படத்தின் விமர்சனம்.

தன்னுடைய குடும்பத்தை விட, தனது தாய்நாடு தான் முக்கியம் என அளவுக்கு அதிகமாக நேசித்த ஒரு இஸ்ரோ விஞ்ஞானி தான் நம்பி நாராயணன். அவர் மீது தேச துரோக புகார் கூறி, அதன் விளைவாக, அவரும், அவருடைய குடும்பமும் பட்ட கஷ்டமும், அவர்கள் கடந்து வந்த அவமானங்கள் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க கொடுத்துள்ள படம் தான் ராக்கெட்ரி.

இந்த படத்துடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் மாதவன் தான் செய்துள்ளார். நம்மிடையே ஒரு சாக்லேட் பாயாக பரிட்சயமான மாதவன், தனக்குள் இப்படி ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை அழகாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் மாதவன் தான் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படத்தில் ரியல் நம்பி நாராயணனை, கதையில் கொண்டுவந்து சேர்ந்ததை பார்க்கும்போது, மாதவன் ஒரு இயக்குனராக ஜெயித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிப்பை பொருத்தவரை நடித்த அனைவருமே திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மாதவனின் நடிப்பு அட்டகாசம், நம்பி நாராயணனாக நடித்துள்ளார் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். இது அவரது கெரியர் பெஸ்ட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார்.

இதுபோக விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் எனும் கெத்தான கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸில் மட்டும் வந்து மாஸ் காட்டிய சூர்யா, இந்த படத்திலும் சூர்யாவாகவே சூப்பரான கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ரோலெக்ஸை போல் இந்த கேரக்டரும் மக்களின் மனதில் பதியும்படி இருக்கும் என்றே சொல்லலாம். ரோலெக்ஸ் மாஸான கேரக்டர் என்றால், இது ஒரு கிளாஸான கேரக்டர். இவர்களைத் தவிர சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக் குமார், ஜெகன் ஆகியோரது நடிப்பும் கவனம் ஈர்க்கின்றன.

இதையும் படியுங்கள்... நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா..ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரம்..

ராக்கெட்ரி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது அப்படத்தின் வசனங்கள் தான். குறிப்பாக “ஒரு நாயை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா, அந்த நாய்க்கு வெறிநாய்னு பெயர் வச்சா போதும், அதே மாதிரி ஒரு மனிதனை நீங்கள் கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கு தேச துரோகினு பட்டம் கொடுத்தா போதும்” என்பது போன்ற வசனங்கள் மிகவும் உயிர்ப்புடன் எழுதப்பட்டு உள்ளன. இதுபோல் படத்தில் ஏராளமான வசனங்கள் உள்ளன.

சிர்சா தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, சைபீரியா என பல நாடுகளை சுற்றி வருவது போல் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை சிர்சா காட்சிப்படுத்தி உள்ள விதம் அருமை. 

இதையும் படியுங்கள்... Shivani: மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய..நெஞ்சுக்கு நீதி படத்தின் நடிகை..என்ன காரணம் தெரியுமா?

இந்த படத்தில் 180 விநாடிகளுக்கு டைமர் ஓடுகிற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும், அந்த காட்சியை தனது பின்னணி இசை மூலம் வேறலெவலுக்கு கொண்டு சென்றுள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இது 2 மணி நேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய பெரிய படமாக இருந்தாலும், எந்த இடத்திலும் படம் ரொம்ப நீளமா இருக்கு என்கிற உணர்வை துளிகூட ரசிகர்கள் மனதில் எழாத வண்ணம் நேர்த்தியாக படத்தை எடிட் பண்ணி உள்ளார் படத்தொகுப்பாளர் பிஜித்.

இதையும் படியுங்கள்... மின்னும் கிளாமரில் விஜய் பட நாயகி.. ஓவர் லோ நெக்..தொடை ஸ்டைல் என கலங்கடிக்கும் மாளவிகா!

இது ராக்கெட்ரி பற்றிய படம் என்பதால், படத்தில் பல்வேறு டெக்னிக்கல் அம்சங்கள் குறித்து பேசி உள்ளனர். அவையெல்லாம் இஞ்ஜினியரிங் படித்தவர்களுக்கு புரியும், ஆனால் சாதாராண ஆடியன்ஸுக்கு புரியுமா என்பது கேள்விக்குறியே. மற்றபடி அனைத்தும் சிறப்பாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

மொத்தத்தில் Rocketry மாதவனுக்கு கிடைத்த Victory என்றே சொல்லலாம்.

click me!