Published : Jun 30, 2022, 08:51 PM ISTUpdated : Jun 30, 2022, 08:52 PM IST
88 வயதான டி. எஸ் ராஜா தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளராக இருந்தார். மூத்த சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.
மூத்த நடிகரான டி.எஸ் ராஜா உடல்நலக்குறைவால் காலமானார். 32 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் டி.எஸ். ராஜா. எம்.ஜீ. ஆருக்கு நெருக்கமான இவர் கமல், ரஜினி, விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும், என்.டி.ஆர், அமிதாப், ஜிதேந்திரா, தர்மேந்திரா மற்றும் பிரான் ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர்.
கலைஞர் மு. கருணாநிதி மிகவும் நேசித்த டி.எஸ்.ராஜா, சென்னை எம்ஜிஆர் நகர் தொகுதி திமுக செயலாளராகவும், சங்க முன்னோடியும், தி. மு.க. முன்னாள் வட்ட செயலாளரும் இருந்தவர். இவர் கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்களின் மாமனாருமானார்.
88 வயதான டி. எஸ் ராஜா தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளராகவும் இருந்தார். மூத்த சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கிற்கு பிறகு நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த கலைஞருக்கு பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.