சரசரவென சரிந்த மதராஸி படத்தின் 2ம் நாள் வசூல்.. முழு ரிப்போர்ட்

Published : Sep 07, 2025, 09:15 AM IST

சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்துக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. மதராஸி படத்தின் 2ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
மதராஸி 2ம் நாள் வசூல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படம் கடந்த வெள்ளிக்கிழமையில் திரையரங்கில் வெளியானது. ஆரம்பத்தில் அதிக எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் இருந்தாலும், டிரைலர், பாடல்கள், விளம்பரங்கள் ஆகியவை படத்துக்கு நல்ல வரவேற்பை உருவாக்கின. இறுதியில் ரிலீஸுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

25
சிவகார்த்திகேயன் படம்

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியானதும் பெரும்பாலான பார்வையாளர்கள் பாசிட்டிவ் ரிவ்யூ அளித்து வருகின்றனர். சில குறைகள் இருந்தாலும், படம் மொத்தத்தில் ரசிக்கத்தக்கதாகவே உள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

35
ஏஆர் முருகதாஸ்

வசூல் விவரங்களை பார்க்கையில் ​​தமிழக அளவில் முதல் நாளில் மதராஸி ரூ.12.8 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இரண்டாம் நாளில் மட்டும் படம் ரூ.11.75 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் மதராசி மொத்த வசூல் ரூ.25 கோடிக்கு மேல் சென்றுள்ளது.

45
மதராஸி வசூல் ரிப்போர்ட்

மதராஸி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மாலை காட்சிகளில் 61%க்கும், இரவுக்காட்சிகளில் 74%க்கும் மேல் ரசிகர்கள் திரண்டனர். சென்னையில் மட்டும் 73%க்கும் மேல் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் நடந்துள்ளன. கோவை, மதுரை, சேலம், வேலூர், திண்டுக்கல், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் நல்ல அளவில் கூட்டம் காணப்பட்டது.

55
மதராஸி ஹவுஸ்ஃபுல்

சென்னையிலும் கோவையிலும் காட்சிகள் கூடுதல் அளவில் திரையிடப்பட்டுள்ளன. சென்னையில் 593 காட்சிகளும், கோவையில் 211 காட்சிகளும் ஓடியுள்ளன. தெலுங்கிலும் படம் ஓரளவு வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் மட்டும் நேற்று 249 காட்சிகள் நடந்துள்ளன. இதனால், மதராஸி படம் தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories