தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை அள்ளிக் கொடுத்த மாதமாக ஆகஸ்ட் மாதம் இருந்தது. ஏனெனில் அம்மாதத்தில் ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்த ஆண்டில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற பெருமையையும் கூலி பெற்றிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் மாதமும் தமிழ் சினிமா வசூல் வேட்டையாக தயாராகி இருக்கிறது. செப்டம்பரில் சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி போன்ற பாப்புலரான நடிகர்களின் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆகின்றன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
24
செப்டம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள்
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் மதராஸி தான். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இதற்கு போட்டியாக வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படமும் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் காத்தி திரைப்படமும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதனுடன் விஜய் டிவி பிரபலம் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி திரைப்படமும் திரைக்கு வருகிறது. இப்படத்தை ஷெரிப் இயக்கி உள்ளார்.
34
செப்டம்பர் 12ந் தேதி என்னென்ன படங்கள் ரிலீஸ்
செப்டம்பர் மாதம் 12ந் தேதி ஐந்து படங்கள் திரைக்கு வர உள்ளன. அதில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படமும் ஒன்று. இதற்கு போட்டியாக அதர்வா ஹீரோவாக நடித்த தணல் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார் அதர்வா. இதனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பேமஸ் ஆன குமரன் ஹீரோவாக நடித்துள்ள குமார சம்பவம் திரைப்படமும் திரைக்கு வர உள்ளது. இதுதவிர யோலோ மற்றும் பாம் ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் அன்றைய தினம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
செப்டம்பர் 19ந் தேதி தான் செம போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அன்றைய தினம் நடிகர் கவின் நாயகனாக நடித்துள்ள ரொமாண்டிக் திரைப்படமான கிஸ் திரைக்கு வர உள்ளது. அதற்கு போட்டியாக விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள சக்தி திருமகன் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கி உள்ளார். அது விஜய் ஆண்டனியின் 25வது படமாகும். இவற்றுடன் பா இரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி உள்ள தண்டகாரண்யம் படமும் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர்.