Published : Sep 15, 2025, 05:55 PM ISTUpdated : Sep 15, 2025, 10:16 PM IST
Madhampatty Rangaraj Controversy : மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்டைலிஷ்டான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்ட 2 ஆண்டுகளில் அவர் 4 முறை கர்ப்பமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்களும் உள்ள நிலையில் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் முன்னரே ஜாய் கிரிசில்டா என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, அவரை கர்ப்பமாக்கிவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டாவும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த புகாரின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
24
ஜாய் கிரிசில்டாவின் பேட்டி
சமீபத்திய பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி தங்கராஜ் பற்றி அடுக்கடுக்கான புகார்களை கூறியிருக்கிறார். இந்தப் பேட்டிக்கு முன்னர் வரை ஜாய் கிரிசில்டா மீது தான் தவறு இருப்பதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன் பழகி உறவில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் சாடி வந்தனர். ஆனால் அவரின் இந்த பேட்டிக்கு பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் அவரை ஏமாற்றி விட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஜாய் கிரிசல்டாவை திருமணம் செய்த 2 ஆண்டுகளில் அவரை மாதம்பட்டி ரங்கராஜ் 4 முறை கர்ப்பமாக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
34
ஜாய் கிரிசில்டா செய்த தவறு
ஜாய் கிரிசில்டா தன்னுடைய முதல் திருமணத்தில் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டு தான் இரண்டாவதாக மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அவரோ முதல் மனைவியை பிரியாமலேயே ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். அதனை சரியாக விசாரிக்காமல் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்தது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேபோல் சினிமாவில் பெரிய ஸ்டைலிஷ்ட் ஆக இருந்த ஜாய், மாதம்பட்டி ரங்கராஜ்-காக தன்னுடைய கெரியரையே விட்டுவிட்டு அவரையே மலைபோல் நம்பி வாழ்ந்திருக்கிறார். சொல்லப்போனால் காதலுக்காக தன்னுடைய கெரியரையே தொலைத்திருக்கிறார் ஜாய்.
அதேபோல் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கர்ப்பமாகி, அபார்ஷன் செய்திருக்கிறார். தற்போது நான்காவது முறை கர்ப்பமான பின்னர் 7 மாத குழந்தையையும் வயிற்றில் சுமந்து வருகிறார். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தான் தற்போது போராடி வருகிறார் ஜாய் கிரிசில்டா. அந்தக் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கமாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.