Singappenne Serial Today 600th Episode : சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிந்த மகேஷ், மித்ராவுக்கு பளார் என அறைவிடுகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அன்பு ஒருபுறம் திணறி வரும் நிலையில், ஆஃபிஸில் நடைபெறும் பார்ட்டியில் ஆனந்தி மற்றும் அன்பு இருவருமே கலந்துகொள்கிறார்கள். இதில் அன்பு, துளசி உடன் வந்து கலந்துகொண்டது ஆனந்திக்கு சற்று நெருடலை கொடுத்தாலும், அன்புவை திருமணம் செய்யும் முடிவில் துளசி தீர்க்கமாக இருக்கிறார். மறுபுறம் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் மகேஷுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள மித்ரா படாத பாடு படுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
ஆனந்தியை திட்டும் மகேஷ்
ஆனந்தி கர்ப்பமான விஷயம் மகேஷுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் பார்ட்டியில் அனைத்து அலுவலக ஊழியர்கள் முன்னிலையிலும் வந்து ஆனந்தியிடம் கேட்க வருகிறார். அங்கு வந்து கோபமாக பேசும் மகேஷ், என்னைப்பற்றி உன் மனசுல முட்டாள்னு நினைச்சுட்டு இருக்கியா என கேட்கிறார். அதனால் பதறிப்போகும் ஆனந்தி நீங்க எனக்கு தெய்வம் மாதிரி சார் என சொல்கிறார். நீ என்னை கடவுளா நினைக்க வேண்டாம் தயவு செஞ்சு மனுஷனா நினைச்சா மட்டும் போதும் என சொல்கிறார் மகேஷ். என்னை மனுஷனா நினைச்சிருந்தேனா இப்படி பொய் சொல்லிருக்க மாட்ட என மகேஷ் கூறியதைக் கேட்டு ஷாக் ஆகி நிற்கிறார் ஆனந்தி.
34
கருணாவின் மைண்ட் வாய்ஸ்
மைண்ட் வாய்ஸில் பேசும் கருணா, நான் சொல்ல வந்ததை காதில் வாங்காமல் சென்றுவிட்டு, இப்ப அவ எதை மறைச்சுட்டானு இந்த குதி குதிக்கிறாரு. ஒருவேளை அவ கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சிருச்சா இல்லேனா வழக்கம்போல உப்பு சப்பு இல்லாத காரியத்துக்கு கோபப்படுறானானு தெரியலையே என குழம்பிப் போய் இருக்கிறார் கருணா. தொடர்ந்து பேசும் மகேஷ், நீ எதைப்பற்றியும் என்னிடம் சொல்லவே இல்லை ஆனந்தி. இங்கு இருக்கும் எல்லாருக்கும் உன்னைப்பற்றி தெரிந்த விஷயம் எனக்கு தெரியவில்லை என மகேஷ் சொன்னதும் பதறிப்போகிறார் ஆனந்தி.
எல்லாரையும் என்னுடைய குடும்பத்தில் ஒருத்தராக நினைத்து நானே ஏமாத்திக்கிட்டது தான் பிரச்சனை என குமுறுகிறார் மகேஷ். அருகில் இருக்கும் மித்ரா, எதுவாக இருந்தாலும் அமைதியா உக்கார்ந்து பேசலாம் என மகேஷை அழைத்துச் செல்ல முயல, அப்போது பளார் என அறைவிடுகிறார் மகேஷ். தன்னிடம் இருந்து எல்லா உண்மையை மறைத்ததற்காக மித்ராவை அறைந்ததாக கூறுகிறார். ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தால் தான் மகேஷ் இவ்வளவு டென்ஷன் ஆக இருக்கிறாரா? என்பது தெரியாமல் அனைவரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.