தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் கலைஞர்களில் வாலியும் ஒருவர். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் இன்றும் பலரது மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. இவர் தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என பல தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருக்கிறார். தமிழில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி உள்ள வாலி, சில பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடித்திருந்தால் அதை வேறு படங்களில் பயன்படுத்துவதும் உண்டு.
24
ஒரே வரிகளில் வந்த வாலியின் 2 பாடல்
அப்படி தனக்கு பிடித்த ஒரு பாடல் வரியை இரண்டு வெவ்வேறு பட பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் வாலி. மழையில் நீ நடந்தால் எனக்கு காய்ச்சல் வரும்... வெயிலில் நீ நடந்தால் எனக்கு வேர்க்கும் என காதலர்கள் இருவருக்கு இடையே பாடிக்கொள்ளும் படியான சிச்சுவேஷனில் வரும் இரண்டு பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் வாலி. அதில் ஒரு பாடல் தேவா இசையில் வெளிவந்தது மற்றொரு பாடல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்தது. இந்த இரண்டு பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
34
ஆசை பட மீனம்மா பாடல்
அதன்படி நடிகர் அஜித்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆசை படத்தில் இடம்பெற்ற பாடலில் தான் முதன்முதலில் இந்த வரிகளை பயன்படுத்தி இருந்தார் வாலி. வஸந்த் இயக்கிய இந்தப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இதில் அஜித், சுவலட்சுமி இடையேயேன காதல் பாடலான மீனம்மா என்கிற பாடலில், “மீனம்மா மழை உனை நனைத்தால் இங்கு எனக்கல்லவா காய்ச்சல் வரும்... அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்துவிடும்” என்கிற வரி இடம்பெற்று இருக்கும்.
இதே வரியை தான் காதலர் தினம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ரோஜா ரோஜா என்கிற பாடலில் பயன்படுத்தி இருப்பார் வாலி. அப்பாடலில் “மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்... வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்” என நடிகர் குணால் தாஜ் மஹால் அருகே படகில் சென்றபடி தன்னுடைய காதலியை பார்த்து பாடும்படி இந்த பாடல் வரிகள் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தை கதிர் இயக்கி இருப்பார். இந்த இரண்டு பாடல்களுமே காதலன் காதலி இடையேயான அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததால், அதற்கு ஒரே வரிகளை வாலி பயன்படுத்தி இருந்தார். அந்த இரண்டு பாடல்களுமே காலம் கடந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருப்பதற்கு வாலியின் வரிகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.