லெஜண்ட் சரவணன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அவரின் 2வது படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாம். அதனுடன் போட்டி போடும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான லெஜண்ட் சரவணன், பிசினஸில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த கனவை கடந்த 2022-ம் ஆண்டு நனவாக்கினார் சரவணன் அருள். அவர் ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட்’ என்கிற திரைப்படம் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முதல் படமே பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து மாஸ் காட்டினார் சரவணன்.
இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் கூட்டணி அமைத்த லெஜண்ட் சரவணன், தற்போது அப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் அண்மையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணனிடம் இரண்டாவது பட ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இந்த ஆண்டு தீபாவளிக்கு அப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார். அப்படத்துக்கு போட்டியாக இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.
24
பிரதீப் ரங்கநாதனின் டியூடு
லவ் டுடே, டிராகன் என இரண்டு பிரம்மாண்ட் வெற்றிப் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் டியூடு. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்து உள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
34
துருவ் விக்ரம் நடித்த பைசன்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள படம் பைசன். கர்ணன், மாமன்னன், வாழை, பரியேறும் பெருமாள் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தான் பைசன் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி ரேஸில் களமிறங்க காத்திருக்கும் மற்றொரு திரைப்படம் கருப்பு. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்து உள்ளார். இப்படமும் தீபாவளி ரிலீசுக்காக காத்திருக்கிறது.