Squid Game 3 : ஸ்குவிட் கேம் சீசன் 3 விமர்சனம் : இந்த முறை ஆட்டம் அசத்தலா? சொதப்பலா?

Published : Jun 28, 2025, 10:38 AM IST

ஸ்குவிட் கேம் வெப் தொடரின் மூன்றாவது சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதன் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Squid Game 3 Twitter Review

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட வெப் தொடர்களில் ஒன்று தான் ஸ்குவிட் கேம். இதன் முதல் சீசன் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மொத்தம் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரை ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கி இருந்தார். முதல் சீசனுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் முதல் சீசன் அளவுக்கு விறுவிறுப்பாக இல்லாததால் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், ஸ்குவிட் கேம் வெப் தொடரின் மூன்றாவது சீசன் ஜூன் 27ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. மொத்தம் 6 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் ரிலீஸ் ஆன முதலே அதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் கடைசி சீசன் இது என்பதால் இதற்கு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. வெப் தொடரை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

24
ஸ்குவிட் கேம் 3 ட்விட்டர் விமர்சனம்

நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், முதல் சீசன் தொடர்ந்து 2வது சீசன் பெருசா ஒர்க் அவுட் ஆகல. பட் இது முதல் சீசன் அளவுக்கு இல்ல, ஆனா நல்லாவே இருக்கும். என்ன ரொம்ப அதிகமா எமோஷன்ஸ் தான் அதிகம். மொத்தமே இதுல 3 கேம் மட்டும் தான் இருக்கும். முதல் கேம் hide and seek: யார் யார அடுத்து கொல்ல போறாங்கனு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். சில காட்சிகள் தவிர மத்த suspence எல்லாம் நல்லாவே இருக்கும். என்ன கொஞ்சம் emotions ரொம்பவே அதிகமா இருக்கும் இந்த சீசன் முழுசும்.

குழந்தை கேம் உள்ள வந்த பிறகு நடக்கும் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமா இருக்கும். குழந்தையை காப்பாத்த நினைக்கும் நம்ம ஹீரோ, அப்பாவே தன்னோட குழந்தையை கொல்ல நினைப்பது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்லாம் நல்லா இருக்கும். என்ன பிளேயர் (ஹீரோ) 456 எலிமினேட்டட்னு சொல்லும் போது உண்மையாவே கிளைமாக்ஸ் மாத்தி இருக்கலாம்னு தோணுது. இந்த கதை இந்த சீசன் ஓட முடியுது, ஆனா கண்டிப்பா அடுத்த சீசன் இருக்கும். அதுக்கான லீட் இருக்கு. துரோகம், முட்டால் தனம், பாசம் ஓகே ஆனால் எமோஷனல் கொஞ்சம் அதிகம், அதை கொஞ்சம் குறைச்சி இருக்களாம் மத்தபடி கண்டிப்பா போர் அடிக்காது என பதிவிட்டுள்ளார்.

34
ஸ்குவிட் கேம் 3 எப்படி இருக்கு?

மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், ஸ்குவிட் கேம் முதல் சீசனோட மிகப்பெரிய வெற்றியாலயும், ஏகத்துக்கும் ஏத்தப்ப்ட்ட ஹைப்பாலயும், இரண்டாம் சீசன் பலரோட எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யல, இப்ப மூன்றாவது சீசன் பார்க்கிறப்ப இதோட ஒரு staging மாதிரிதா S2 எடுத்திருக்காங்க. அங்க விட்ட இடத்துல இருந்து, விறுவிறுனு துவங்குது சீரிஸ். இங்கயும் சில கேம்ஸ், எமோஷனலா நிறைய டச்சிங்'கான சீன்ஸ், செண்டிமெண்ட், துரோகம் செய்ற சில கிறுக்கனுங்கனு இங்கயும் நல்ல காட்சிகள் இருக்கு. கேம்ஸ் எல்லாமே சூப்பர்.

கேம்-ஓட டியூரேஷன் நீளமா இருந்தாலும், டென்ஷன் நல்லா மெயிண்டெயின் செஞ்சு எடுத்திருக்காங்க. கடைசியா ஒரு 222 வருவார், இவர் வந்தப்புறம்தா சூப்பரா இருக்கும். கண்டிப்பா ஒர்த்வாட்ச். முதல் 2 சீசன் பார்த்தவங்க மிஸ் பண்ணாதீங்க. இங்க சில பல கேள்விகளுக்கான விடைகள் இருக்கு. தமிழ் டப் ஒகே என குறிப்பிட்டுள்ளார்.

44
ஸ்குவிட் கேம் 3 விமர்சனம்

ஸ்குவிட் கேம் சீசன் 3 பார்த்த நெட்டிசன் போட்டுள்ள பதிவில், இந்த சீசனுக்கு தனி கதைலாம் கிடையாது, சீசன் 2 எங்க முடிஞ்சிதோ அந்த சீசன்ல இருந்துதான் சீசன் 3 ஆரம்பமாகும். மொத்தமா 60 போட்டியாளர்களோட 4 வது கேம் ஆரம்பமாகும். மொத்தமாக மூன்று கேம் தான் இருக்கு. கடைசியில் யார் ஜெயிச்சா இது தான் க்ளைமாக்ஸ்.

மூன்று கேமுமே பிரமாதமாக மேக் பண்ணிருக்காங்க. இந்த சீசன்ல ரெண்டு விஷயங்கள் தான் மொத்த சீசனயும் பிரமாதபடுத்திருச்சி... ஒன்னு; கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு கேரக்டர் போட்டியாளரா களமிறங்குவாங்க, அவங்க வந்த பிறகு சீரிஸ் செம்ம த்ரில்லிங்கா போகும். ரெண்டாவது; சீரிஸ்ல ஹீரோவுக்கான ஸ்பேஸ் கம்மிதான். கடைசி எப்பிசோட்லதான் அவருக்கான ஸ்கோப் இருக்கு. என்ன சிறப்புனா மற்ற கேரக்டர்களோட டிசைன் சூப்ரா பண்ணிருந்தாங்க. இதனால கேரக்டஸ் இறக்கும் போது ரொம்ப எமோஷ்னலாவும் கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சிது.

கிளைமாக்ஸ்ல கண் கலங்குவது உறுதி. சீரிஸ்ல நெகட்டிவ் லாம் எனக்கு தோனல. எபிசோடு 1 மற்றும் 2 நார்மலா போகும். என்னய்யா எப்பயும் போலதான இந்த சீசன்லயும் ஒரே திரைக்கதை தானானு நினைக்ற டைம்ல புதுசா ஒரு விஷயத்த திரைக்கதைல கொண்டுவந்து சிறப்பாக பண்ணிட்டாங்க. த்ரில் & எமோஷன்ஸ் செம்மயா வொர்க் ஆகிருக்கு என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories