தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முழு நேர ஹீரோவாக உருவெடுத்துள்ளவர் விஜய் ஆண்டனி. இவர் நான் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், கொலைகாரன், பிச்சைக்காரன், சைத்தான் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் மார்கன் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இதை தயாரித்து, இசையமைத்தும் உள்ளார்.
25
1000 திரைகளில் ரிலீஸ் ஆன மார்கன்
மார்கன் திரைப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் பிரிகிடா, தீப்ஷிகா, சமுத்திரக்கனி, அஜய் திஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை சுமார் 1000 திரைகளில் ரிலீஸ் செய்துள்ளனர். விஜய் ஆண்டனி கெரியரில் அதிக திரைகளில் ரிலீஸ் ஆன திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் முதல் ஷோ பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
35
மார்கன் ட்விட்டர் விமர்சனம்
மார்கன் படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே சில தடைகள் இருந்தாலும் மற்றபடி படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அஜய் திஷானுக்கு அருமையான அறிமுக படம். வேறலெவலில் நடித்துள்ளார். அவரின் கேரக்டர் படத்தை அடுத்தடுத்து நகர்த்திச் செல்கிறது. விஜய் ஆண்டனி வெட்டி ஹீரோயிசம் செய்யாமல் கதைக்கு தேவையான அளவில் மட்டும் நடித்துள்ளார் என குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன், திரில்லர் படத்திற்கான அம்சங்களுடன் ஆரம்பமாக, அதே திசையில் நகர்கிறது. இருந்தாலும் படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. படத்தின் திரைக்கதை எதிர்பார்த்த அளவு விறுவிறுப்பாக இல்லை. மற்றுமொரு வழக்கமான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை தான் கொடுக்கிறது. படத்தில் இயக்குனர் புதுமையாக எதுவும் கொடுக்கவில்லை. இது முதல் பாதி மட்டுமே இரண்டாம் பாதி எப்படி இருக்கு என்பதை பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.
55
மார்கன் விமர்சனம்
மார்கன் படத்தின் முதல் பாதி சூப்பராக உள்ளது. செம விறுவிறுப்பாக இருக்கிறது. லியோ ஜான் பால் நன்கு எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி நீட்டான மற்றும் கிளீனான ரோல். அஜய் திஷானின் நடிப்பு முதல் படத்திலேயே வேறலெவலில் உள்ளது. பின்னணி இசையும் உலகையே மறக்கிறேன் பாடல் மிக அருமை. ஒளிப்பதிவு அற்புதம் என குறிப்பிட்டுள்ளார்.