ஷண்முகப் பிரியன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் லவ் மேரேஜ். இப்படத்தில் சுஷ்மிதா பட் ஹீரோயினாக நடித்துள்ளார். இதுதவிர அருள் தாஸ், ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இறுகப்பற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
24
விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ்
லவ் மேரேஜ் திரைப்படம் ஜூன் 27ந் தேதியான இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. லவ் மேரேஜ் படத்தின் கதையை பொருத்தவரை திருமண ஏக்கத்தோடு இருக்கும் 30 வயது இளைஞனுக்கு பெண் பார்க்க அவரது குடும்பத்தார் செல்கிறார்கள். அப்போது அந்த பெண்ணின் மீது நாயகனுக்கு காதல் ஏற்படுகிறது. பின்னர் திருமணத்திற்கு பிரச்சனை வருகிறது. அதையெல்லாம் தாண்டி இந்த லவ் மேரேஜ் நடந்ததா என்பது தான் படத்தின் கதைச்சுருக்கம்.
34
லவ் மேரேஜ் ட்விட்டர் விமர்சனம்
லவ் மேரேஜ் படத்தின் முதல் பாதியை பொருத்தவரை ஒரு சிம்பிளான, அனைவராலும் ரிலேட் பண்ணும் வகையிலான ஒரு ஃபன்னான பேமிலி எண்டர்டெயினர் படமாக உள்ளது. விக்ரம் பிரபு மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அடக்க ஒடுக்கமான மாப்பிள்ளையாக அடக்கி வாசித்துள்ளார். படத்தின் கதாபாத்திரங்களும், சூழலும் நம்மை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. ஷான் ரோல்டனின் இசை படத்தின் Mood-ஐ பிரதீபலிக்கிறது. இண்டர்வெலின் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. எப்படி போகும் என்கிற எதிர்பார்ப்பையும் தூண்டும் வகையில் உள்ளது.
முதல் பாதியில் ஜாலியாக நகர்ந்த படம் இரண்டாம் பாதியில் சீரியஸ் ஆக நகரத் தொடங்குகிறது. முதல் பாதியில் அடக்கி வாசித்த விக்ரம் பிரபு, இரண்டாம் பாதியில் நன்கு ஸ்கோர் செய்து இருக்கிறார். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. படத்தின் வல்கர் ஆன விஷயங்களோ, வன்முறை காட்சிகளோ இல்லை. இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப கதை நகர்கிறது. யூகிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் பேமிலி ஆடியன்ஸுக்கான படமாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் பேமிலியோடு பார்க்க ஒர்த் ஆன படம் என பதிவிட்டுள்ளார்.