நடிகர் கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'விருமன்'. திரையரங்குகளில் சில படங்கள் நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிக்க கஷ்டப்பட்டு வரும் நிலையில், விருமான் திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு இயக்குனர் முத்தையாவிற்கு எந்த அளவிற்கு பங்கு உள்ளதோ அதே அளவிலான பங்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் உள்ளது.
குறிப்பாக அதில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணால மற்றும் மதுர வீரன் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இதனிடையே இதில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணால பாடலை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல் பலர் தொடர்ந்து விமர்சித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.